Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

VD15: விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்.. இயக்குநர் யார் தெரியுமா?

VD15 Movie Shooting Pooja:தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. இவரின் முன்னணி நடிப்பில் SVC59 என்ற படமானது உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

VD15: விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..  இயக்குநர் யார் தெரியுமா?
விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Oct 2025 16:45 PM IST

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பிரபல நடிகராக மக்களிடையே பிரபலமாகிவருபவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக கிங்டம் (Kingdom) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது கடந்த 2025 ஜூலை 31ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில் சுமார் ரூ150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. அந்த வகையில், இந்த படத்தை அடுத்ததாக தொடந்து புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குநரான ரவி கிரண் கோலா (Ravi Kiran Kola) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இந்த படமானது ரசிகர்களால், “ரவுடி ஜனார்தன்” என அழைக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், இன்று 2025 அக்டோபர் 11ம் தேதியில் பூஜைகளுடன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதில் தயாரிப்பாளர் தில் ராஜு உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: அவர் தேசிய விருது வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் – இயக்குநர் அட்லி

ஷூட்டிங் பூஜைகள் தொடர்பாக படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள் பதிவு :

விஜய் தேவரகொண்டா மற்றும் கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் கதைக்களம் :

நடிகர் விஜய் தேவரகொண்டா இறுதியாக நடித்திருந்த கிங்டம் படமானது முற்றிலும், ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் கலந்த திரைப்படமாக அமைந்திருந்தது. அதேபோல இந்த புதிய படமும் அந்த ஜானரில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. இந்த படமானது கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் கதைக்களத்தில் தயாராகுவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக விஜய் தேவரகொண்டா பல்வேறு உடல் மாற்றங்களை செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் எனது ‘Lucky Charm’ அவர்தான்.. சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா?

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நிலையில், நெருக்கமான காட்சிகளில் நடிப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷின் தெலுங்கு சினிமா ரீ- எண்டரி :

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின் பெரிதாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை, மேலும் இவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலே நடித்துவந்தார். அந்த வகையில், தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இவருக்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கில் உருவாகும் பிரம்மாண்ட படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.