Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Samantha: தமிழ் சினிமாவில் எனது ‘Lucky Charm’ அவர்தான்.. சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா?

Samantha's Lucky Charm Actor: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக படங்களில் நடிக்காவிட்டாலும், இவருக்கு ரசிகர்கள் மட்டும் குறையவே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, தமிழ் சினிமாவில் தனது Lucky Charm நடிகர் குறித்து பேசியுள்ளார்.

Samantha: தமிழ் சினிமாவில் எனது ‘Lucky Charm’ அவர்தான்.. சமந்தா சொன்ன நடிகர் யார் தெரியுமா?
சமந்தா ரூத் பிரபுImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Oct 2025 08:30 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). குறிப்பாக தளபதி விஜய் (Thalapathy VIjay) மற்றும் ராம் சரண் (Ram Charan) என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் அல்லது மற்ற மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இவரின் முன்னணி நடிப்பில் குஷி (Kushi) என்ற படமானது இறுதியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இந்த படமானது சமந்தாவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக சமந்தா, எந்தவித படங்களிலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இவரின் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம்தான் சுபம் (Shubam). இந்த படத்தில் சிறிய கேமியோ வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்பு ஒரு நேர்காணலில் பேசிய சமந்தா, தமிழ் சினிமாவில் தனது Lucky Charm நடிகர் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அந்த நடிகர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை நடிகர் தளபதி விஜய்தான் (Thalapathy Vijay). மேலும் சமந்தா பேசியது பற்றி தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: சமந்தாவுடன் ரொமாண்டிக் சீன்.. அவங்க என்ன பண்ணணுமோ அதில் தெளிவா இருப்பாங்க – சூர்யா சொன்ன சம்பவம்!

தமிழ் சினிமாவில் சமந்தாவின் Lucky Charm நடிகர் குறித்து அவர் பேசிய விஷயம்:

அந்த நேர்காணலில் நடிகை சமந்தாவிடம், தமிழ் சினிமாவில் உங்களின் லக்கி சார்ம் நடிகர் யார் ? என கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய சமந்தா ரூத் பிரபு, நான் எப்போதும் சொல்வதுதான். தமிழில் எனது லக்கி சார்ம் எப்போதும் விஜய் சார்தான் என அந்த நேர்காணலில் நடிகை சமந்தா தெரிவித்திருந்தார். இந்த தகவலானது தளபதி விஜய் மற்றும் சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

சமந்தா மற்றும் தளபதி விஜய்  படங்கள் :

தளபதி விஜய் மற்றும் சமந்தாவின் கூட்டணியில் வெளியாகியிருந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, வெற்றி படங்களாக உள்ளது. அந்த வகையில் விஜய் மற்றும் சமந்தா இருவரும் இணைந்து 3 திரைப்படங்களில் நடித்திருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி, அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் மற்றும் தெறி என சமந்தா மற்றும் தளபதி விஜய் இணைந்து 3 படங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தல – தளபதியின் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஹரிஷ் கல்யாண் பேச்சு!

மேலும் நடிகை சமந்தா சுமார் 2 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் கூட்டணியில் உருவாகும் அரசன் படத்தில் இவரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகளை நடந்துவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.