Trisha Krishnan: விஜய்யின் நம்பரை இப்படித்தான் சேவ் பண்ணிருக்கேன்- திரிஷா பகிர்ந்த தகவல்!
Trishas Nickname for Thalapathy Vijay: தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருபவர் திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகி வருகிறது. முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்தியாவையே கலக்கிவரும் நடிகைதான் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). தனது 42 வயதிலும் படங்களில் கதாநாயகியாகாவே நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் தக் லைஃப் (Thug Life) . கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) கூட்டணியில் வெளியான இப்படத்தில், மிக முக்கிய கதாநாயகியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இதில் இவர் இந்திராணி என்ற வேடத்தில் நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தார். மேலும், இவர் புதிய படங்களிக்காக ஒப்பந்தமாகியும் வருகிறார்.
இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய திரிஷா கிருஷ்ணன், அதில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) பெயரை எவ்வாறு அழைப்பார் மற்றும் அவரின் நம்பரை சேவ் பண்ணி வைத்திருப்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார். மேலும் அந்த பெயருக்கான காரணத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : சக்தித் திருமகன் படம் அந்த ஹீரோ பண்ணிருக்கவேண்டியது.. இயக்குநர் அருண் பிரபு சொன்ன நடிகர் யார் தெரியுமா?
விஜய்யின் நம்பர் குறித்து திரிஷா சொன்ன விஷயம்
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் ஒருவர், ஒவ்வொரு நடிகர்களின் பெயரை கூறி அவர்களின் நம்பரை போனில் எவ்வாறு சேவ் பண்ணி வைத்திருக்கிறீர்கள் மற்றும் அவர்களை எவ்வாறு அழைப்பீர்கள் ? என கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த திரிஷா கிருஷ்ணன், தொடர்ந்த ஒவ்வொரு நடிகர்களை பற்றியும் பேசியிருந்தார். அப்போது தளபதி விஜய்யை பற்றி பேசிய திரிஷா கிருஷ்ணன். அதில் ” நாங்கள் இருவரும் கில்லி படத்தில் பணியாற்றும்போது, இயக்குநர் தரணியும், நானும் அவரை “சீட்டா” என கூப்பிடுவோம்.
இதையும் படிங்க : நான் யாரையும் குறைசொல்ல விரும்பல.. மாஸ்டர் படத்தில் நடித்து அதற்காகத்தான்- சாந்தனு பாக்யராஜ் பேச்சு!
ஏனென்றால், அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது அவர் சீட்டா படம்போடப்பட்டிருக்கும், ஜாக்கெட் ஒன்றை அணிந்திருந்தார். அதனால் அவரை சீட்டா என்றுதான் அப்போது அனைவரும் அழைத்தார்கள். நான் அவருக்கு ஒரு பெயர் வைக்கவிடும் என்றால் சீட்டா என்றுதான் வைப்பேன். அவர் நம்பரையும் அப்படித்தான் போனில் சேவ் பண்ணி வைத்திருக்கிறேன்” என நடிகை திரிஷா கிருஷ்ணன் அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார்.
திரிஷா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
திரிஷா கிருஷ்ணனின் புதிய படங்கள்:
தமிழில் தக் லைஃப் படத்தை அடுத்தாக, நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் திரிஷா கிருஷ்ணன் இணைந்திருந்தார். இந்த படமானது ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் கதைக்களத்துடன் தயாராகியுள்ளது. மேலும் இவர் தெலுங்கில், விஸ்வம்பரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் இவர் நடிகர் சிரஞ்சீவியுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.