Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Trisha Krishnan : விஜய் குறித்த கேள்வி.. மேடையில் வெட்கப்பட்ட திரிஷா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ!

Trisha Krishnan About Thalapathy Vijay :தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை திரிஷா கிருஷ்ணன். இவரின் நடிப்பில் மட்டும் இந்த ஆண்டில், தொடர்ந்து பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. சமீபத்தில் சைமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரிஷா நடிகர் விஜயை வாழ்த்தி பேசியுள்ளார்.

Trisha Krishnan : விஜய் குறித்த கேள்வி.. மேடையில் வெட்கப்பட்ட திரிஷா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ!
திரிஷா மற்றும் விஜய் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Sep 2025 18:46 PM IST

நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 4 படங்கள் வெளியாகியுள்ளது. அஜித் குமாருடன் (Ajith Kumar) 2 படங்கள், மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் ஒரு படமும் மற்றும் கமல்ஹாசனுடன் (Kamal Haasan) 1 படமும் வெளியாகியிருந்தது. இதில் அஜித் குமாருடன் நடித்திருந்த குட் பேட் அக்லி திரைப்படமானது வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அஜித் குமாரின் மனைவியாக நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்தது. மேலும் தொடர்ந்து தெலுங்கிலும் சிரஞ்சீவியின் நடிப்பில் விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் நடிகை திரிஷா கிருஷ்ணன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது, அவருடன் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) புகைப்படம் காட்டப்பட்டு, அவர் பற்றி கூற சொன்னார்கள். அப்போது மேடையில் பேசிய திரிஷா கிருஷ்ணன், “விஜயின் கனவுகள் நிறைவேறட்டும்” என அவரை வாழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : அதிரடி ஆக்ஷ்ன் தெறிக்குதே.. பிருத்விராஜின் ‘விலாயத் புத்தா’ பட டீசர்!

தளபதி விஜயை வாழ்த்தி திரிஷா பேசிய விஷயம் :

அந்த நிகழ்ச்சியில் மேடையில் தளபதி விஜயின் புகைப்படம் காட்டப்பட்டதுமே, நிகழ்ச்சி அரங்கமே அதிர்ந்தது என்றே கூறலாம். மேலும் நடிகை திரிஷாவிடம், தளபதி விஜயை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பேசிய, திரிஷா “விஜயின் புதிய பயணத்திற்காக வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவரின் கனவுகள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் நிறைவேறட்டும். அவர் அதற்கு தகுதியானவர்தான்” என்று நடிகை திரிஷா கிருஷ்ணன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தளபதி விஜய் குறித்து திரிஷா பேசிய வைரல் வீடியோ :

இதையும் படிங்க : ரசிகர்களின் பேரன்பிற்கு சொந்தகாரரான மம்முட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

நடிகை திரிஷா சைமா விருதில் கலந்துகொண்ட பதிவு :

நடிகை திரிஷா, அபிராமி மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அர்ச்சனாவுடன் இணைந்து கலந்துகொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படத்தை சைமா தனது எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.