Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

The GOAT : தளபதி vs இளைய தளபதி.. தளபதி விஜய்யின் தி கோட் வெளியாகி ஓராண்டு நிறைவு!

1 Year Of The Greatest Of All Time : தளபதி விஜய்யின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியான திரைப்படம் தி கோட். இப்படமானது வெளியாகி ஒரு வருடத்தை கடந்த நிலையில், படக்குழு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

The GOAT : தளபதி vs இளைய தளபதி.. தளபதி விஜய்யின் தி கோட் வெளியாகி ஓராண்டு நிறைவு!
தி கோட் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 Sep 2025 15:57 PM IST

நடிகர் விஜய்யின் (Vijay) நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு வெளியான 68வது படம்தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்  (The Greatest of All Time). இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கியிருந்தார். இந்த படத்தில் தளபதி விஜய் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்திருந்தார். காந்தி, ஜீவன் மற்றும் கிளைமேக்ஸில் வரும் ஓஜி  என 3 வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் முன்னணி நடிகைகளாக மீனாட்சி சவுத்ரி (Meenakshi Chowdhury), சினேகா (Sneha), லைலா என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் தளபதி விஜய் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்திருந்தார். இதில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், பிரேம்ஜி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படமானது இன்றுடன் 2025 செப்டம்பர் 5ம் தேதியுடன் வெளியாகி 1 வருடத்தை நிறைவு செய்திருக்கும் நிலையில், படக்குழு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் டெலீட்டட் கட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ஆக்‌ஷனில் அசத்தும் சிவகார்த்திகேயன்.. மதராஸி விமர்சனம் இதோ!

தி கோட் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ பதிவு

தி கோட் திரைப்படத்தின் பாடல்கள்

இந்த திரைப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க, ஏ.ஜி.எஸ். என்டேர்டைமென்ட் நிறுவனமானது தயாரித்திருந்தது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பல வருடங்களுக்கு பின் விஜய்யின் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மதராஸி குறித்து நெகிழ்ந்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் போஸ்ட்

இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து, தி க்ளோன், சின்ன சின்ன கண்கள், ஸ்பார்க், விசில் போடு போன்ற பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. அதிலும் குறிப்பாக சின்ன சின்ன கண்கள் என்ற பாடலை இளையராஜாவின் மகள், மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏஐ கொண்டு  இந்த பாடலை உருவாக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி கோட் திரைப்படத்தின் மொத்த வசூல் விவரம்

இந்த தி கோட் திரைப்படத்தை சுமார் ரூ 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்ததாக கூறபடுகிறது. அதில் தளபதி விஜய் சுமார் ரூ 175 கோடிகளை சம்பளமாக பெற்றிருந்தாராம்.

இந்த படமானது வெளியான முதல் நாளில் சுமார் ரூ 41 கோடிகளை வசூல் செய்திருந்தது. மொத்தத்தில் இப்படமானது ரூ 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்ததாக படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அர்ச்சனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.