மதராஸி குறித்து நெகிழ்ந்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் போஸ்ட்
Actor Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மதராஸி. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த படம் மதராஸி. இந்தப் படம் இன்று 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி உள்ளார். படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். இவர் முன்னதாக தமிழில் நடிகர் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், பிஜு மேனன், பிரேம் குமார், தலைவாசல் விஜய், சந்தான பாரதி, வினோதினி வைத்யநாதன், சபீர், சஞ்சய் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ரொமாண்டிக் ஆக்ஷன் பாணியில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமனாம ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் சார்பக தயாரிப்பாளர் ஸ்ரீ லட்ஷ்மி பிரசாத் தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.முருகதாஸ் உடன் ஒரு அருமையான பயணம் இந்த மதராஸி:
இந்த நிலையில் மதராஸி படத்தில் பணியாற்றியது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்தப் பதிவில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது, கடந்த ஒன்றரை வருடங்களாக ஏ.ஆர்.முருகதாஸ் சார், எங்களது திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினர் மற்றும் என் அன்பான ராக்ஸ்டார் அனிருத் ஆகியோருடன் ஒரு அற்புதமான பயணத்தை மேற்கொண்டேன்.
இந்த ஆக்ஷன் எண்டர்டெய்ன்மெண்ட் படத்தை உங்களுக்கு வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். நீங்கள் அனைவரும் எங்கள் வேலையை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். தயவு செய்து திரையரங்குகளில் பாருங்கள் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… லோகா மலையாள சினிமாவில் எங்களுக்கு பெரிய பட்ஜெட் படம் – நடிகர் துல்கர் சல்மான்
சிவகார்த்திகேயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
I had an amazing journey over the past one and half years with @ARMurugadoss sir, along with a solid cast and crew and my dear rockstar @anirudhofficial ❤️
We have given our best to bring you this action entertainer. Hope you all will love our work. Please watch it in theatres… pic.twitter.com/U7AZbxRWsQ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 4, 2025
Also Read… Venkat Prabhu : மங்காத்தா மாதிரி இருக்கணும்னு சூர்யா சொன்னாரு – வெங்கட் பிரபு பேச்சு!