Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Venkat Prabhu : மங்காத்தா மாதிரி இருக்கணும்னு சூர்யா சொன்னாரு – வெங்கட் பிரபு பேச்சு!

Venkat Prabhu About Suriyas Influence : தமிழில் பிரபல இயக்குநராக இருந்து வருபவர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில், மாஸ் திரைப்படத்தை இயக்கும்போது சூர்யா வைத்த டிமாண்ட் குறித்து வெங்கட் பிரபு ஓபனாக பேசியுள்ளார்.

Venkat Prabhu  : மங்காத்தா மாதிரி இருக்கணும்னு சூர்யா சொன்னாரு –  வெங்கட் பிரபு பேச்சு!
வெங்கட் பிரபு மற்றும் சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Sep 2025 22:41 PM

இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை உச்ச பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் தளபதி விஜய்யின் 68வது திரைப்படமான “தி கிரேட்டெஸ்ட்  ஆஃப் ஆல் டைம்” (கோட்) (GOAT)என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படத்தில் தளபதி விஜய் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியில் இந்த படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

இது சுமார் ரூ 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றிருந்தது. மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு சூர்யாவை (Suriya) வைத்தும், மாசு (மாசு என்கிற மாசிலாமணி) (Masssu) என்ற திரைப்படத்தை முன்னதாக இயக்கியிருந்தார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, மாஸ் படத்தின் காட்சிகளில் சூர்யா மாற்ற சொன்ன விஷயங்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார். இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : இன்ஸ்டாவில் கூலி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்

சூர்யாவின் மாசு திரைப்படம் குறித்த வெங்கட் பிரபு பகிர்ந்த விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குநர் வெங்கட் பிரபு பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் சூர்யாவின் மாசு படத்தின் கதை அமைப்பு பற்றியும், சூர்யாவின் காட்சிகள் குறித்தும் பேசியுள்ளார். வெங்கட் பிரபு அதில், “மாசு திரைப்படத்தை நான் சிம்பிள் திரைப்படமாக உருவாக்கவேண்டும் என நினைத்தேன். ஒரு நபர் தன்னுடைய விபத்துக்கு பின்னால்,  இறந்தவர்கள் அவரின் கண்முன்னே தெரிகின்றனர். மேலும் ஒரு பேய் அவரிடம் வந்து உதவி கேட்கிறது, பின் அதை சுற்றி அந்த கதையானது அமைவதாக இருந்தது.

இதையும் படிங்க : இந்தியாவில் இதை ஊக்குவிப்பது முக்கியம்.. மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து அஜித் குமார் பேச்சு!

சூர்யா குறித்து வெங்கட் பிரபு வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

நானும் அந்த படத்தை முதலில் ஒரு சாதாரணமான ஹியூமர் படமாகதான் உருவாக்க நினைத்தேன். மேலும் சூர்யா சாரின் பக்கத்தில் இருந்து, இந்த படத்திற்கு மாஸ் காட்சிகள் வேண்டும், மங்காத்தா படத்தை இயக்கியவர் நீங்கள், அதனால் படத்தில் மாஸ் காட்சிகள் வேண்டும் மற்றும் இந்த படத்தை ஒரு தொடர்ச்சியாக உருவாக்கவேண்டும் என கேட்கப்பட்டது.

அதனால் இந்த மாசு திரைப்படத்தின் கதையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது. இப்போது ஒரு படத்தின் கதையை எழுதிவிட்டு, அதில் மாற்றத்தை ஏற்படுத்தினால் ஒட்டுமொத்த படமுமே மாறிவிடும். அதனாலோ என்னவோ மாசு படத்திற்கு அந்த அளவிற்கு வரவேற்பில்லை” என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.