Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இன்ஸ்டாவில் கூலி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்

Actress Shruti Haasan: நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாவில் கூலி படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Aug 2025 16:37 PM

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை ஸ்ருதி ஹாசன் (Actress Shruti Haasan). நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். நடிகை ஸ்ருதி ஹாசன் நடிகையாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் பல ஹிட் படங்களில் நடித்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார். ஸ்ருதி ஹாசனின் நடிப்பை மிஸ் செய்து கொண்டிருந்த தமிழ் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமைந்தது அவர் கூலி படத்தில் நடித்தது.

இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார். இவர் முன்னதாக கமல் ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் படம் மாபெரும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதே போல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கூலி படம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட பதிவு:

இதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ப்ரீத்தியின் டைரி… கூலி சில அற்புதமான நண்பர்களையும் நினைவுகளையும் உருவாக்கியது மிகவும் வேடிக்கையான அனுபவமாக இருந்தது.

மேலும் இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. எப்போதும் போல அன்புக்கும் பாராட்டுக்கும் அனைவருக்கும் நன்றி என்று நடிகை ஸ்ருதி ஹாசன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… ரஜினியுடன் இணைந்து நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம் – சத்யராஜ் கொடுத்த விளக்கம்!

நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

Also Read… ராட்சசன் படத்தில் நடிக்க அந்த நடிகர் தான் காரணம் – நடிகை அமலா பால் சொன்ன விசயம்!