Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்களுக்கு நான் ஈ படம் பிடிக்குமா? அப்போ இந்த லவ்லி படத்தை மிஸ் செய்யாதீர்கள்

Lovely Movie: நடிகர் நானி நடிப்பில் வெளியான நான் ஈ என்ற ஃபேண்டசி படம் தெலுங்கு ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தைப் போல ஈ கதாப்பாத்திரத்தை வைத்து மலையாள சினிமாவில் வெளியான படம் தான் லவ்லி.

உங்களுக்கு நான் ஈ படம் பிடிக்குமா? அப்போ இந்த லவ்லி படத்தை மிஸ் செய்யாதீர்கள்
லவ்லிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Aug 2025 00:05 AM

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் நானி நாயகனாக நடித்து தெலுங்கு சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் ஈகா. இந்தப் படத்தை தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளியிட்டனர். இந்தப் படத்தில் ஒரு கட்டத்தில் நடிகர் நானி வில்லன் கிச்சா சுதீப்பால் கொலை கொலைசெய்யப்படுவார். அவரது மறுபிறவியில் ஒரு ஈயாக பிறந்து அவரது காதலி சமந்தா உடன் சேர்த்து வில்லன் கிச்சா சுதீப்பை கொலை செய்வார். இந்தப் படம் தென்னிந்திய மொழி மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த மாதிரி ஒரு ஈ கான்செப்டை வைத்து மலையாள சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் தான் லவ்லி. நடிகர் மேத்யூ தாமஸ் (Actor Mathew Thomas) இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார்.

இவர் யார் என்றால் லியோ படத்தில் நடிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷாவின் மகனாக நடித்தவர் தான். மலையாள சினிமாவில் இளம் நடிகராக பலப் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியான லவ்லி படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

லவ்லி படத்தின் கதை என்ன?

கல்லூரி முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிக்கும் இளைஞர் தான் மேத்யூ தாமஸ். ஆனால் அவரால் வெளி நாட்டிற்கு செல்ல முடியாத காரணத்தால் கிடைத்த வேலைகளை செய்து வருகிறார். இந்த சமயத்தில் அவரது உறவினர் ஒருவரின் உதவியால் அரசு வேலை ஒன்றில் சேர்கிறார் மேத்யூ தாமஸ்.

அந்த வேலையில் சற்றும் ஆர்வம் இல்லாத அவர் அம்மாவின் வற்புறுத்தலால் அங்கு செல்கிறார். சென்ற இடத்தில் ஒரு பெண்ணின் கைப்பையில் இருந்து விழும் காண்டம் பாக்கெட்டை எடுத்து கொடுக்கிறார். அப்போது அருகில் இருந்தவர்கள் அதனைப் பார்க்க அந்தப் பெண் தன்னுடையது இல்லை என்றும் அவன் தன்னிடம் தவறாக நடந்துகொள்கிறார்ன் என்று மாற்றி கூறிவிடுவார்.

அப்படி அவர் கூற கரணம் அந்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். அந்த காண்டம் அவருடையது என்றால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்று அந்தப் பெண் மாற்றிக் கூற இது போலீஸ் வழக்காக மாறுகிறது. இதனால் மேத்திவ் தாமஸ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.

Also Read… சத்தமே இல்லாமல் நடந்த விஷால் – சாய் தன்ஷிகா திருமண நிச்சயம்… வைரலாகும் போட்டோஸ்!

ஜெயிலில் இருக்கும் போது மேத்திவ் தாமஸிற்கு பேசும் ஈ ஒன்று ஃப்ரண்டாக கிடைக்கிறது. அந்த ஈ-க்கு குரல் கொடுத்தது சிவாங்கி தான். இவர்களின் நட்பு காரணமாக ஜெயிலில் ஜாலியாக இருக்கிறார் மேத்யூ தாமஸ். ஒரு கட்டத்தில் அவர் விடுதலை ஆகும் நேரத்தில் அந்த ஈ-யை பார்க்க முடியாமல் போகிறது. அதன்பிறகு அந்த ஈயிடம் மேத்யூ தாமஸ் எப்படி பேசினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

லவ்லி படத்தின் ட்ரெய்லர் இதோ:

Also Read… Sivakarthikeyan : அனிருத்தின் திருமணம் எப்போது? சிவகார்த்திகேயன் சொன்ன ஆச்சர்ய பதில் இதோ!