ரீ ரிலீஸாகிறது கோலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த அமர்களம் படம்
Amarkalam Movie: ரீல் ஜோடிகளாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து தற்போது ரியல் ஜோடிகளாக 25 வருட திருமண வாழ்க்கையில் இருப்பவர்கள் தான் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அமர்களம் படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் ரீல் ஜோடிகளாக ரசிகர்களின் மனதை கவர்ந்த பலர் ரியல் ஜோடிகளாக மாறியது அனைவரும் அறிந்ததே. அவர்களின் ரியால் வாழ்க்கை ரீல் வாழ்க்கை மாதிரி சிறப்பாக இருந்ததா என்றால் பலருக்கு பிரிவிலேயே முடிந்தது. இந்த நிலையில் ரீல் ஜோடியாக மட்டும் இல்லாமல் ரியல் ஜோடியாகவும் தங்களது வாழ்க்கையை கால் நூற்றாண்டாக சிறப்பாக வாழ்கிறார்கள் நடிகர்கள் அஜித் குமார் – ஷாலினி தம்பதி. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது 25 ஆண்டுகளாக தங்களது திருமண வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது அவர்களின் ரசிகர்களுக்கு மிகவும் சந்தோஷமாகவும் எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் என பலருக்கு தெரிந்தாலும் இவர்களின் காதலுக்கு அடித்தளம் போட்ட இடம் என்பது அமர்களம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் தான்.
ஆம் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து நடித்தப் படம் அமர்களம். இதுதான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் கூட. இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது நடிகை ஷாலினியின் நடவடிக்கை பிடித்துபோக அவர் மீது அஜித் குமாருக்கு காதல் மலர்ந்துள்ளது. அதனை உடனே சொல்லாமல் தன்மீது ஷாலினிக்கு காதல் மலரும் வரை அஜித் பொறுமையாக கத்திருந்தார். ஆனால் அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள் அஜித் மீது ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் பேசி பிடித்துப்போக இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இப்படி இவர்களின் காதலுக்கு அடித்தளம் போட்ட அமர்களம் படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது.




ரீ ரிலீஸாகும் அமர்களம் படம் – எப்போது தெரியுமா?
இயக்குநர் எழுதி இயக்கிய படம் அமர்களம். கடந்த 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது 26 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாகவும் நடிகை ஷாலினி நாயகியாகவும் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரகுவரன், நாசர், ராதிகா, அம்பிகா, வினு சக்கரவர்த்தி, தாமு, ரமேஷ் கண்ணா, சார்லி, பூவிளங்கு மோகன், பொன்னம்பலம், ராம்ஜி, மகாநதி சங்கர், வையாபுரி, மணீஷ் பொருண்டியா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்து இருந்தனர்.
தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. அதன்படி சமீபத்தில் கேப்டன் பிரபாகரன் படம் விஜயாகந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகை ஷாலினியின் பிறந்த நாளை முன்னிட்டு அமர்களம் படம் ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
நடிகை ஷாலினியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் நாயகனாகும் அபிஷன் ஜீவிந்த்!