எதிரி யாருன்னு யோசிக்காம சண்டை செய்யனும் – ஹரிஷ் கல்யாணின் டீசல் பட டீசர் இதோ!
Diesel Movie Official Teaser | நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் டீசல். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் ஹரிஷ் கல்யாண் (Actor Harish Kalyan). அந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் விமர்சிக்கப்பட்டாலும் அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கியது. அதன்படி நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான அறிது அறிது, சட்டப்படி குற்றம், சந்தா மாமா, பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், தராளபிரபு, ஓ மனப்பெண்ணே, லெட்ஸ் கெட் மேரிட், பார்க்கிங் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஹர்ஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து.
கிராமத்தில் இருக்கும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழகம் மட்டும் இன்றி தென்னிந்திய ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் டீசல்.




திபாவளி ரேசிற்கு தயாரான டீசல் படம்:
இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசரைப் படக்க்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சண்முக முத்துசாமி இயக்கியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வா சிங் என பலர் நடித்துள்ளனர்.
Also Read… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது விஷாலின் மகுடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
A stubborn dream, a genuine effort ❤️🔥
Here’s the #Diesel teaser for you all – https://t.co/LQZMJ6WXkX#DieselDiwali 🎯 pic.twitter.com/TUZdSnh3uM
— Harish Kalyan (@iamharishkalyan) August 27, 2025
Also Read… லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் இன்னும் இருக்கு… லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஃபர்ஸ்ட் பஞ்ச் இதோ!