Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

19 ஆண்டுகளை நிறைவு செய்தது கமல் ஹாசனின் வேட்டையாடு விளையாடு படம்

19 Years Of Vettaiyaadu Vilaiyaadu: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் வேட்டையாடு விளையாடு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.

19 ஆண்டுகளை நிறைவு செய்தது கமல் ஹாசனின் வேட்டையாடு விளையாடு படம்
வேட்டையாடு விளையாடுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Aug 2025 21:14 PM

உலக நாயகன கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்ஹ்டில் வெளியான வேட்டையாடு விளையாடு படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி 2006-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான வேட்டையாள விளையாடு படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் ஜோதிகா, கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, சலீம் பெய்க், பிரகாஷ் ராஜ், டிஜே ரவி, லெவ் கோர்ன், யோக் ஜபே, ஸ்டன் சிவா, கண்ணன், அஹுதி பிரசாத், ராஜஸ்ரீ, ஜானகி சபேஷ், ராஜீவ் சௌத்ரி, பாப் ஹன்செபால், வித்யா, ரேகா, அர்ச்சனா, பிதுஷி டாஷ் பார்டே, VTV கணேஷ், திர்லோக் மாலிக், ராஜீவன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன்த் சேனல் கம்யூணிகேஷன் சார்பாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வேட்டையாடு விளையாடு படத்தின் கதை இதுதான்:

தொடர்ந்து நடைபெரும் கொலைகளைக் கண்டுப்பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நடிகர் கமல் ஹாசன் நடித்து இருந்தார். நியோ-நோயர் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் எதிர்பராத விதமாக கமல் ஹாசனுடன் பணிபுரியும் காவல்துறை அதிகாரி கொலை செய்யப்படுவார். அதனை விசாரிப்பதற்காக வரும் இடத்தில் கணவரால் கொடுமைப்படுத்தப்படும் நடிகை ஜோதிகா உடன் கமல் ஹாசனுக்கு பழக்கம் ஏற்படுகிறது.

அதே நேரத்தில் தொடர் கொலைகளை செய்பவர்கள் யார் என்பதை விசாரிக்கும் பணியில் நடிகர் கமல் ஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவர்கள் யார் என்பதனையும் கண்டுபிடிப்பார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 19 வருடங்களைக் கடந்துள்ளது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எனக்கு அந்தப் படம் மிகவும் பிடிக்கும் – சிவகார்த்திகேயன் எத சொல்லிருக்காரு தெரியுமா?

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆக்‌ஷன் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன்… ஆண்டனி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?