Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆக்‌ஷன் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன்… ஆண்டனி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Antony Movie: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் ஆக்‌ஷன் நாயகியாக நடித்த ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று தற்போது பார்க்கலாம்.

ஆக்‌ஷன் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன்… ஆண்டனி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
ஆண்டனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Aug 2025 19:40 PM

மலையாள சினிமாவில் ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது ஆண்டனி படம். இந்தப் படத்தை இயக்குநர் ஜோஷி இயக்கி இருந்த நிலையில் திரைக்கதையை ராஜேஷ் வர்மா எழுதி இருந்தார். இந்தப் படம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Actress Kalyani Priyadarshan) நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நைலா உஷா, ஆஷா சரத், செம்பன் வினோத் ஜோஸ், விஜயராகவன், ஹரிபிரசாந்த் எம்.ஜி. கிஜு ஜான், அப்பானி சரத், பினு பப்பு, சிஜாய் வர்கீஸ், ஜூவல் மேரி, டினி டாம், ஆர்ஜே ஷான், ஜினு ஜோசப், பத்மராஜ் ரதீஷ், ராஜேஷ் சர்மா, சுதீர் கரமன, ஸ்ரீகாந்த் முரளி, அசிம் ஜமால், கோட்டயம் ரமேஷ், மோகன் ராமன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனங்களான ஐன்ஸ்டின் மீடியா நெக்ஸ்டல் ஸ்டுடியோஸ் அல்ட்ரா மீடியா & எண்டர்டெய்ன்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் ஐன்ஸ்டின் சாக் பால் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டனி படத்தின் கதை என்ன?

நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் அம்மா ஆஷா அவரது இரண்டாவது கணவரிடம் இருந்து தனது மகளை பாதுகாப்பதற்காகவே அவரை கல்லூரி படிப்பை ஹாஸ்டலில் தங்கவைத்து படிக்க வைத்து வந்தார். இந்த நிலையில் ஆஷாவின் இரண்டாவது கணவரை ஜோஜூ ஜார்ஜ் ஒரு பிரச்னை காரணமாக கொலை செய்து இருப்பார். இதனை ஆஷா பார்த்துவிடுவார். இந்த விசயத்தை போலீசிடம் சொல்லாமல் இருப்பதற்காக அவருக்கு சில சொத்துகள் வழங்கப்படும். இதனைத் தொடர்ந்து தனது மகளுடன் நடிகை ஆஷா அதே ஊரில் வாழ்ந்து வருவார். அப்போது மழை நாள் ஒன்றில் ஆஷாவை அவரது இரண்டாவது கணவரின் ஆட்களை கொலை செய்துவிடுவார்கள்.

Also Read… சோனு டூ சாந்தனு… ஹேப்பி பர்த்டே சாந்தனு பாக்யராஜ்!

இதனை தொடர்ந்து கல்யாணியை ஜோஜூ ஜார்ஜ் கார்டியனாக பார்த்துக்கொள்வார். கல்லூரியில் பாக்சிங் போட்டியாளராக இருக்கும் அவரை மேனேஜ்மெண்டுக்கு பிடிக்காது. மேலும் அவர் எந்த பிரச்னை வந்தாலு முதலில் அடுத்துவிட்டு அப்பறம் தான் பேசுவார். இதனால் கல்லூரியில் இருந்து பல புகார்கள் கல்யாணி மீது தொடர்ந்து வரும். முதலில் அவரது கார்டியனாக இருக்கும் ஜோஜூ ஜார்ஜிற்கு கடுப்பாக இருந்தாலும் பின்பு கல்யாணி பக்கம் இருக்கும் நியாயம் தெரிந்ததும் அவருக்கு ஆதரவாக இருப்பார். இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்க்கின்றது.

நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… விஜயின் ஜன நாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் பிரபலங்கள்? வைரலாகும் தகவல்