ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எனக்கு அந்தப் படம் மிகவும் பிடிக்கும் – சிவகார்த்திகேயன் எத சொல்லிருக்காரு தெரியுமா?
Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது நடிப்பில் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக இவரது நடிப்பில் மதராஸி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). இந்த நிலையில் இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் முன்னதாக வெளியான அமரன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அதில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) இயக்கத்தில் மதராஸி படத்திலும் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
மேலும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று 24-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீனா படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்:
இந்த விழாவில் நாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் உடன் இணைந்து படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவில் படக்குழுவினர் பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து மிகவும் பெருமையாக பேசினார். மேலும் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படங்களில் அவர் இயக்குநராக அறிமுகம் ஆன தீனா படம் அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அந்த விழாவில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… லவ்வர் படத்தில் என் கதாப்பாத்திரத்திற்கு வந்த ரிவியூ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு – கண்ணா ரவி பேட்டி
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Sivakarthikeyan at #Madharaasi AL:
– I love Murugadoss sir’s films. DHEENA with Thala, I love the mirror shot. Then he did Ramana with Vijaykanth sir, which was so special. After that Ghajini, which was so special. Then Thuppakki, which redefined mass genre in Kollywood🔥
-… pic.twitter.com/3bxAH3I56Q— AmuthaBharathi (@CinemaWithAB) August 24, 2025
Also Read… ஷூட்டிங்கில் ரஜினியைப் பார்த்துக்கொண்டே இருப்பேன் – நடிகை சிம்ரன் பேச்சு!