Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஷூட்டிங்கில் ரஜினியைப் பார்த்துக்கொண்டே இருப்பேன் – நடிகை சிம்ரன் பேச்சு!

Actress Simran: தமிழ் சினிமா ரசிகர்களின் எவர்கிரீன் கனவுகன்னியாக வலம் வருபவர் நடிகை சிம்ரன். இவர் தற்போது கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் அவருடன் நடித்த அனுபவத்தை பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

ஷூட்டிங்கில் ரஜினியைப் பார்த்துக்கொண்டே இருப்பேன் – நடிகை சிம்ரன் பேச்சு!
பேட்டImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Aug 2025 22:54 PM

தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை சிம்ரன் (Actress Simran). இவர் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தார் என்று சொல்வதை விட எவர்கிரீன் கனவுக் கன்னியாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பு தற்போது உள்ள ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவர் அப்போ எப்படி இருப்பார் என்று தெரியுமா என அவரது ரசிகர்கள் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சிம்ரன் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த பேட்ட படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சிம்ரன் உடன் இணைந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், திரிஷா, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், மகேந்திரன், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், முனிஷ்காந்த், சனந்த், விவேக் பிரசன்னா, முத்துக்குமார், மணிகண்டன் ஆச்சாரி, கை தென்னவன், ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ், ஷபீர் கல்லாரக்கல், வெங்கடேஷ், தீபக் பரமேஷ், ஆதித்யா ஷிவ்பிங்க் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபத்தை கூறிய சிம்ரன்:

இந்தப் படத்தில் நடிகர் சிம்ரன் உடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகை சிம்ரன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது. அதில் அவர் கூறியதாவது பேட்ட படத்தில் நடிக்கும் போது நடிகர் ரஜினிகாந்தை பார்த்துக்கொண்டே இருந்தேன் என்று நடிகை சிம்ரன் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Also Read… தென்னிந்திய சினிமாவில் நாளை ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

நடிகை சிம்ரனின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… லியோ படத்தில் என் கதாப்பாத்திரத்தை கேட்டதும் பயந்துட்டேன் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி!