Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வெற்றி எனக்கு மிகவும் உதவியது – ஏ.ஆர்.முருகதாஸ்

AR Murugadoss: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான அமரன் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதுகுறித்து சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அமரன் பட வெற்றி தனக்கு எவ்வளவு உதவி செய்தது என்பது குறித்து பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வெற்றி எனக்கு மிகவும் உதவியது – ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Aug 2025 16:22 PM

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அமரன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 31-ம் தேதி அக்டேபர் மாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராகுல் போஸ், புவன் அரோரா, ஹேதாக்ஷி வி, லல்லு, அன்பு தாசன், ஸ்ரீகுமார், ஷ்யாமபிரசாத், ஷியாம் மோகன், பால் டி. பேபி, கீதா கைலாசம், ராஜு ராஜப்பன், ஷைலா தாஸ், உமைர் லத்தீப், சுகம்யா சங்கர், நவ்யா சுஜ்ஜி, ஷிருஷ் ஜூட்ஷி, ரோஹ்மன் ஷால், மிர் சல்மான், அஜய் நாக ராமன், கௌரவ் வெங்கடேஷ், பிரயாஸ் மான், அபினவ் ராஜ், ஜான் கைப்பள்ளி, ரோஹன் சூர்யா கனுமா ரெட்டி, வைபவ் முருகேசன், ஹனுன் பாவ்ரா, விகாஸ் பங்கர், விஜய் கார்த்திக், சூர்யா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்ட்டர்நேஸ்னல் சார்பாக தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமரன் படத்தின் வெற்றி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது:

இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படம் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் அமரன் படம் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியுள்ளதாவது, சிவகார்த்திகேயன் மவீரன் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே எனது படத்தில் கமிட்டாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் அமரன் படத்தில் வெற்றியைக் கொடுத்தப்போது நான் இயக்குநர் ராஜ்குமாரிடம் சொன்னேன் சிவகார்த்த்கேயனின் அல்லது கமல் ஹாசன் இந்த வெற்றியை நினைத்து மகிழ்ச்சியடைந்தது விட நான் தான் மகிழ்ச்சியடைந்தேன். அடுத்தப் படம் என்னுடையது என்று அவர் மகிழ்ச்சியாக தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகிவ் அருகின்றது.

Also Read… சூர்யாவின் 47-வது படத்தில் அவரது கதாப்பாத்திரம் இதுதான்… வைரலாகும் தகவல்

இணையத்தில் கவனம் பெறும் ஏ.ஆர்.முருகதாஸ் வீடியோ:

Also Read… கூலி படத்தில் மாஸ் காட்டிய உபேந்திராவின் மனைவி அஜித் பட நடிகைதானாம்… யார் தெரியுமா?