தலைவன் தலைவி சூப்பர் ஹிட்.. வெற்றி விழாவைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடிய படக்குழு!
Thalaivan Thalaivii Movie Success Meet : மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தலைவன் தலைவி. இப்படமானது வெளியாகி மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவைப் படக்குழு வெகு சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) நடிப்பில் அவரது 51வது படமாக வெளியாகியிருக்கும் படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii) திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படமானது திருமண வாழ்வில் கணவன் மற்றும் மனைவி சந்திக்கும் பிரச்னைகள் குறித்த கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. வழக்கமான பாண்டிராஜ் படம் போல இல்லாமல், இப்படமானது சற்று வித்தியாசமாக இருந்தது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான மகாராஜா (Mahgaraja) படத்தை அடுத்ததாக, இந்த 2025 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் ஹிட்டான வெற்றிப் படமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில், தலைவன் தலைவி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கடந்த 2025, ஆகஸ்ட் 17ம் தேதியில் படக்குழு, படத்தின் வெற்றி விழாவைப் (Success meet) பிரம்மாண்டமாகக் கொண்டாடியிருக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது மக்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையும் படிங்க : கூலி படத்தில் வில்லனாக மிரட்டிய நாகார்ஜுனா..! தமிழ் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட வெற்றி விழா பதிவு
From Hearts to Theatres ❤️ Families’ Favourite Blockbuster 🫶 Celebrating the Grand Success of #ThalaivanThalaivii #தலைவன்தலைவி@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @TGThyagarajan @iYogiBabu @Music_Santhosh @SathyaJyothi @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh… pic.twitter.com/L47LyG1shV
— Sathya Jyothi Films (@SathyaJyothi) August 17, 2025
இந்த வெற்றி விழாவின் நடிகர் விஜய் சேதுபதி யோகி பாபு மற்றும் பாண்டிராஜ் என பல்வேறு திரை பிரபலங்களும் இணைந்து கலந்துகொண்டனர். இந்த தலைவன் தலைவி பாடமானது சுமார் ரூ 60 பட்ஜெட்டில் உருவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் மொத்தமாக சுமார் ரூ.75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இது குறித்துப் படக்குழுவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ஓடிடியிலும் வெளியாகக் காத்திருக்கிறது.
இதையும் படிங்க : நடிகை சுவாசிகா குறித்து புகழ்ந்து பேசிய லப்பர் பந்து பட இயக்குநர்!
தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ என்ற ஓடிடி நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக அந்நிறுவனம் சுமார் ரூ.30 கோடிகள் கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படமானது வெளியாகி 4 வரங்களை கடந்திருக்கும் நிலையில், ஓடிடி நிறுவனம் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 22ம் தேதியில், அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது திரையரங்குகளில் வெற்றி பெற்றது போல ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.