Priyanka Mohan: ‘தலைவர் 173 படத்தில் நடிக்கிறேனா?’ – உண்மையை உடைத்த பிரியங்கா மோகன்!
Priyanka Mohan About Thalaivar 173 Movie: தென்னிந்திய மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துவருபவர் பிரியங்கா மோகன். இவரின் நடிப்பில் மேட் இன் கொரியா என்ற படமானது விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்கணல் ஒன்றில் பேசிய இவர், தலைவர் 173 படத்தில் நடிக்கிறேனா? என்பது குறித்து தெரிவித்துள்ளர்.
நடிகை பிரியங்கா மோகன் (Priyanka Mohan) கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கதாநாயகியாக இருந்துவருகிறார். இவர் சினிமாவில் கன்னட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நுழைந்திருந்தாலும், இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் கிடைத்தது. இவர் தமிழில் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) “டாக்டர்” ( Doctor) என்ற படத்தின் மூலம் நுழைந்தார். தமிழில் தான் அறிமுகமான முதல் படமே இவருக்கு சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல வசூலை கொடுத்து சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இதையடுத்து சூர்யாவுடனும் படத்தில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டிருந்தார். மேலும் இவரின் நடிப்பில் 1 ஆண்டுக்கும் மேலாக எந்த தமிழ் படங்களும் வெளியாகவில்லை என்ற நிலையில், தொடர்ந்து படங்களில் கதாநாயகியாகவே நடிக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படம்தான் “மேட் இன் கொரியா” (Made In Korea).
இப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த பிரியங்கா மோகன், பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது அவரிடம் தலைவர் 173 (Thalaivar 173) படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என கேள்விகள் கேட்ட நிலையில், பிரியங்கா மோகன் உண்மையை உடைத்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: சிலம்பரசன் – விஜய் சேதுபதியின் காட்சி பிரம்மாண்டமாக இருக்கும் – அரசன் படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
தலைவர் 173 திரைப்படம் குறித்து பிரியங்கா மோகன் பேச்சு:
அந்த நேர்காணலில் பேசிய நடிகை பிரியங்கா மோகன், “ரஜினி சாரின் தலைவர் 173 படத்தின் கதை என்னவென்று எனக்கு தெரியாது. அப்போது நான் எப்படி அதில் ஒரு பகுதியாக இருப்பேன் என எனக்கு தெரியவில்லை. டான் படமானது மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த பிறகு, டாக் குழுவினர் அனைவரும் சிபி சக்கரவர்த்தி என்ன செய்யப்போகிறார் என ஆவலுடன் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி.. முதலிடத்தில் இருக்கும் சீரியல் எது தெரியுமா?
தற்போது சிபி சார் ரஜினிகாந்த் சாருடன் புது படத்தில் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிகப்பெரிய ரஜினிகாந்த் சாரின் ரசிகர்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா திரைப்படத்தின் டீசர் குறித்த பதிவு:
Indha kadhai Korea la Shenba yaara meet panra-nradha pathi illa, it’s about who Shenba becomes 🔥🥰
Watch Made In Korea on Netflix, coming soon in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam #MadeInKorea#MadeInKoreaOnNetflix#NextOnNetflixIndia pic.twitter.com/SAybn5BMuY— Netflix India (@NetflixIndia) February 3, 2026
நடிகை பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா திரைப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இடத்தி தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கும் நிலையில், வரும் 2026 மார்ச் 12ம் தேதி முதல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. தற்போது இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.