Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Thalaivar173: ரஜினிகாந்தின் தலைவர் 173.. ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? – வைரலாகும் தகவல்!

Thalaivar 173 Movie Plot Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தமிழில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ள படம் தலைவர் 173. இந்த படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ள நிலையில், இந்த படம் பிரபல ஹாலிவுட் படத்தில் ரீமேக் என கூறப்படுகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Thalaivar173: ரஜினிகாந்தின் தலைவர் 173.. ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? – வைரலாகும் தகவல்!
தலைவர் 173 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Jan 2026 13:15 PM IST

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களை கவர்ந்துவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). 70 வயதை கடந்தும் சினிமாவில் தற்போதுவரையிலும் கதாநாயகனாகவே நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக கூலி (Coolie) என்ற படமானது வெளியான நிலையில், இது கோலிவுட் சினிமாவில் 2025ம் ஆண்டில் அதிகம் வசூலித்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2 (Jailer 2) படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விரைவில் முழுமையாக நிறைவடையவுள்ளது. இந்த படத்திற்கு பின் ரஜினிகாந்த் நடிக்கும் படம்தான் தலைவர் 173 (Thalaivar 173). இப்படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி (Cibi Charkaravarthy) இயக்க, கமல்ஹாசன் (Kamal Haasan) தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் எழுதும் கதை.. நிச்சயம் பிரம்மாண்டமாக இருக்கும் – சௌந்தர்யா ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர்173 படத்தின் கதை :

இந்த் தலைவர்173 படத்தில் ரஜினிகாந்த் டெய்லராகவும், இப்படம் 70ஸ் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் கதை கடந்த 2022ம் ஆண்டில் வெளியான ஹாலிவுட் படமான தி அவுட்பிட் ஏற்னற படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் AA23 – கதாநாயகி யார் தெரியுமா?

இந்த படத்தை டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் நிலையில், மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாம். இந்த படத்தில் ரஜினிகாந்த் லீட் வேடத்தில் நடிக்க, அவருடன் சாய் பல்லவியும் மிக முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் இந்த் தலைவர் 173 படமானது ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் 173 திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவு:

இந்த தலைவர் 173 படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துவருகிறார். ரஜினிகாந்த் தற்போது, ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நிலையில், இந்த் படத்தின் ஷூட்டிங் முடித்த கையேடு தலைவர்173 படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. இப்படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடக்கும் நிலையில், 2026 மார்ச் மாதம் முதல் ஷட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.