AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தம்பதியின் தூக்கத்தை கெடுக்கும் பழக்கங்கள் என்னென்ன?

Couples’ Relationship and Health: மொபைல் பயன்படுத்துதல், குறட்டை மற்றும் ஒத்தில்லா தூக்க நேரம் தம்பதிகளின் தூக்கத்தை பாதிக்கும். இது உடல்நலம், மனநிலை மற்றும் உறவில் பிரச்சனைகளை உருவாக்கும். சரியான தூக்க பழக்கங்கள் உறவை மேம்படுத்த உதவும். நல்ல தூக்கத்திற்கான பழக்கங்கள் உறவு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

தம்பதியின் தூக்கத்தை கெடுக்கும் பழக்கங்கள் என்னென்ன?
தம்பதியின் தூக்கத்தை கெடுக்கும் பழக்கங்கள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Mar 2026 16:40 PM IST

துணையுடன் ஒரே படுக்கையில் தூங்குவது நெருக்கத்தை அதிகரித்தாலும், சில பழக்கங்கள் தூக்கத்தையும் உறவையும் பாதிக்கலாம். மொபைல் நீல ஒளி மெலட்டோனின் சுரப்பை குறைத்து தூக்க சுழற்சியை குலைக்கிறது. அதிக குறட்டை துணைக்கு தூக்கமின்மை மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். வெவ்வேறு நேரத்தில் தூங்குவது மற்றும் சத்தங்கள் ஒத்துழைப்பை குறைக்கும். இரவில் அடிக்கடி எழுவது மற்றொருவரின் தூக்கத்தை கலைக்கலாம். நல்ல தூக்கத்திற்கான பழக்கங்கள் உறவு ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

ஒரே படுக்கை – நெருக்கம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை

உங்க துணையுடன் ஒரே படுக்கையில் தூங்குவது நெருக்கத்தை அதிகரிப்பதாக பலரும் நம்புகின்றனர். ஆனால், குறட்டை விடுவது, இரவில் மொபைல் பயன்படுத்துவது போன்ற சில சிறிய பழக்கங்கள், உங்க துணையுடன் தூக்கத்தை கெடுப்பதோடு உறவை பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால், உடல்நலத்திற்கும் மனநிலைக்கும் மட்டுமல்லாமல், உறவு திருப்திக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆய்வுகள் கூறும் உண்மை நிலை

ResearchGate-ல் வெளியான ஆய்வில், ஒரு துணைக்கு தூக்கப் பிரச்சனை இருந்தால் அது மற்றொருவரின் உடல்நலம், மனநிலை மற்றும் உறவு திருப்தியை பாதிக்கக்கூடும் என தெரியவந்துள்ளது. தூக்கத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் இந்நாளில், உங்கள் துணையின் தூக்கத்தை பாதிக்கக்கூடிய சில பொதுவான இரவு பழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

படுக்கையில் மொபைல் பயன்படுத்துவது – தூக்கத்திற்கு எதிரி

தூங்கும் முன்பு மொபைல் பார்க்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆய்வின்படி, மொபைலில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளி, மெலோடோனின் ஹார்மோன் சுரப்பை பாதித்து தூக்க சுழற்சியை பாதிக்கக்கூடும். திரை வெளிச்சம் காரணமாக அறை இருட்டாக இருப்பது, நோட்டிபிகேஷன் அல்லது வீடியோ சத்தம் போன்றவை துணையின் தூக்கத்தை பாதிக்க செய்யலாம். இது தூக்கத்தின் தரத்தை குறைக்கும் முக்கிய காரணமாகும்.

அதிக சத்தத்தில் குறட்டை – துணைக்கு தூக்கமின்மை

இது பல தம்பதிகள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். ஒருவர் அதிகமாக குறட்டைவிட்டால், மற்றொருவருக்கு தூக்கமின்மை ஏற்பட செய்யலாம். சிலர் படுத்தவுடனே குறட்டைவிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த சத்தத்தால் துணையால் விரைவாக தூங்க முடியாது. அதேபோல், திடீரென வரும் அதிக குறட்டை சத்தத்தால் தூக்கத்தில் இருந்து விழிக்கவும் வாய்ப்புள்ளது.

வெவ்வேறு நேரத்தில் தூங்குவது – ஒத்துழைப்பு குறைவு

சிலர் விரைவாக தூங்க ஆசைப்படுவார்கள். சிலர் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்க விரும்புவார்கள். இது தம்பதிகள் சந்திக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சனையாகும். நீண்ட நேரம் லைட் அணைக்காமல் இருப்பது, டிவி சத்தம், மொபைலில் பிறருடன் பேசுவது அல்லது காலையில் அலாரம் சத்தம் போன்றவை துணைக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது இருவருக்கும் இடையிலான ஒத்துழைப்பை பாதிக்கக்கூடும்.

இரவில் அடிக்கடி எழுவது – தூக்க முறையில் இடையூறு

சிலருக்கு இரவில் எழுந்து பாத்ரூம் செல்வது, தண்ணீர் குடிப்பது போன்ற பழக்கங்கள் இருக்கக்கூடும். அச்சமயத்தில் லைட் ஆன் செய்வது, படுக்கையில் எழும் போது ஏற்படும் ஷேக்கிங், கதவு திறக்கும் போது வரும் சத்தம் போன்றவை மற்றொருவரின் தூக்கத்தை பாதிக்கலாம். இது தொடர்ந்து நடந்தால் தூக்கமின்மை பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தூக்க தரத்தை மேம்படுத்த எளிய டிப்ஸ்

தம்பதிகள் தூக்க தரத்தை மேம்படுத்த சில எளிய வழிகளை பின்பற்றலாம். தூங்குவதற்கு 30 நிமிடங்கள் முன்பு மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கவும். படுக்கையறையை இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருக்கவும். பெரிய மெத்தை மற்றும் தனித்தனி போர்வை பயன்படுத்துவது சிரமங்களை குறைக்கும். குறட்டை பிரச்சனைக்கு மருத்துவ உதவி கோரலாம். முடிந்தவரை ஒரே மாதிரியான தூக்க சுழற்சி கடைப்பிடிக்கவும்.

நல்ல தூக்கம் – நல்ல உறவின் அடித்தளம்

இரவில் சரியாக தூங்காமல் இருப்பது மறுநாள் எரிச்சல், கோபம் மற்றும் உறவில் தேவையற்ற சண்டைகளை எழுப்பலாம். நல்ல தூக்கம், உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உறவு ஆரோக்கியத்திற்கும் முக்கியம் என ஆய்வுகள் கூறுகிறது. இதன் காரணமாக சில தம்பதிகள், Sleep Divorce Trend பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். அதாவது, நன்றாக தூங்குவதற்காக தனித்தனி படுக்கை அல்லது தனித்தனி அறையில் தூங்க செய்வார்கள்.

Follow Us