AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சரியான சானிட்டரி பேடைத் தேர்வு செய்வது எப்படி?

Sanitary Pad Rash: சானிட்டரி பேடுகளில் உள்ள ரசாயனங்கள், பிளாஸ்டிக் அடுக்குகள் மற்றும் நீண்ட நேர ஈரப்பதமான உராய்வு காரணமாக பெண்களுக்கு சரும ரேஷஸ் மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க வாசனை இல்லாத காட்டன் பேடுகளைப் பயன்படுத்துவதுடன், 4-6 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கின்களை மாற்றி பிறப்புறுப்புப் பகுதியை உலாராக வைத்திருப்பது அவசியம்.

சரியான சானிட்டரி பேடைத் தேர்வு செய்வது எப்படி?
மாதவிடாய் சுகாதாரம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Mar 2026 17:44 PM IST

பெண்களின் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி பேடுகள் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளன. இருப்பினும், சில பெண்களுக்கு இந்த காலக்கட்டத்தில் அரிப்பு, சிவத்தல், எரிச்சல் அல்லது ரேஷஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்குப் பயன்படுத்தப்படும் சானிட்டரி பேடுகளில் உள்ள ரசாயனங்கள், செயற்கைப் பொருட்கள் மற்றும் அவற்றை நீண்ட நேரம் மாற்றாமல் பயன்படுத்துவது போன்ற பல்வேறு காரணிகள் முக்கியக் காரணமாக அமைகின்றன. இது குறித்து மூத்த மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர்  கூறுகையில், உராய்வு, ஈரப்பதம் மற்றும் ரசாயன வெளிப்பாடு ஆகியவையே இத்தகைய எரிச்சலுக்கு அடிப்படைத் தூண்டுகோலாக அமைகின்றன என்று விளக்குகிறார்.

சானிட்டரி பேடு அலர்ஜி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்

சானிட்டரி பேடு அலர்ஜி ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் உராய்வு மற்றும் ஈரப்பதம் ஆகும். நீண்ட நேரம் பேடு உட்புறத் தொடைப் பகுதிகளுடன் தொடர்பில் இருக்கும்போது, நடக்கும்போது ஏற்படும் தொடர்ச்சியான உராய்வு சருமத்தைப் பாதிக்கிறது. அத்துடன் வியர்வை மற்றும் ரத்தப்போக்கினால் ஏற்படும் ஈரப்பதம் அங்கு சேரும்போது, பாக்டீரியாக்கள் வளர்ந்து எரிச்சலை உருவாக்குகின்றன. மேலும், சில பேடுகளில் சேர்க்கப்படும் வாசனை திரவியங்கள், சாயங்கள் மற்றும் ஒட்டும் பொருட்கள் போன்றவை உணர்திறன் கொண்ட சருமத்தில் ஒவ்வாமையை (Allergy) ஏற்படுத்தி, அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கின்றன. சிலவற்றில் உள்ள பிளாஸ்டிக் அடுக்குகள் வெப்பத்தைத் தக்கவைப்பதால் பூஞ்சைத் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ரேஷஸ் மற்றும் எரிச்சலைத் தடுக்கும் எளிய வழிமுறைகள்

இத்தகைய பாதிப்புகளைக் குறைக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம். பாதிக்கப்பட்ட பகுதியில் குளிர் ஒத்தடம் கொடுப்பது அழற்சியைக் குறைக்க உதவும். குறிப்பாக, ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது வழக்கமான நேரங்களில் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறையோ பேடுகளை மாற்ற வேண்டும். பிறப்புறுப்புப் பகுதியை வெதுவெதுப்பான நீர் மற்றும் மென்மையான சோப் கொண்டு கழுவி, எப்போதும் உலராக வைத்திருப்பது கிருமித் தொற்றைத் தடுக்கும். லூசான காட்டன் உள்ளாடைகளை அணிவது காற்றோட்டத்தை அதிகரித்து எரிச்சலைக் குறைக்கும். அரிப்பு அதிகமாக இருந்தால் ஹைட்ரோகார்ட்டிசோன் கிரீம்களை வெளிப்புறத் தோலில் மட்டும் பயன்படுத்தலாம் மற்றும் வெதுவெதுப்பான நீரில் ‘Sitz Bath’ எடுப்பதும் நல்ல பலனைத் தரும்.

Also Read: தம்பதியின் தூக்கத்தை கெடுக்கும் பழக்கங்கள் என்னென்ன?

சரியான சானிட்டரி பேடைத் தேர்வு செய்வது எப்படி?

சருமப் பாதிப்புகளைத் தவிர்க்க சரியான நாப்கின்களைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். பிளாஸ்டிக் தாள்கள் கொண்ட பேடுகளுக்குப் பதிலாக, ஆர்கானிக் மற்றும் பருத்தியினால் ஆன (Cotton based) பேடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். வாசனையற்ற மற்றும் ‘Hypoallergenic’ என்று சான்றளிக்கப்பட்ட பேடுகள் சருமத்திற்குப் பாதுகாப்பானவை. இவை ரசாயனத் தாக்கத்தைக் குறைத்து அலர்ஜி ஏற்படும் அபாயத்தைக் குறைக்கின்றன. தரமான மற்றும் மென்மையான மேற்பரப்பு கொண்ட பேடுகளைப் பயன்படுத்துவது நீண்ட காலத்திற்குத் தோலில் ஏற்படும் தழும்புகள் மற்றும் எரிச்சலில் இருந்து விடுதலை அளிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Follow Us