சமையலை சுலபமாக்கும் 20 டிப்ஸ்: தினசரி வாழ்க்கைக்கு உதவும் அற்புத குறிப்புகள்!
20 Smart Cooking Tips to Make Your Kitchen Faster and Tastier: சமையலை எளிதாக்கும் 20 பயனுள்ள டிப்ஸ்கள் மூலம் சுவையும் வேகமும் ஒரே நேரத்தில் பெற முடியும். சிறிய மாற்றங்கள் உணவின் ருசி, மணம் மற்றும் தரத்தை அதிகரிக்க உதவுகின்றன. இந்த குறிப்புகள் தினசரி சமையலில் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும்.
சமையல் சீக்கிரம் முடியணும் ஆனா சுவையாகவும் இருக்கணுமா? உங்களுக்காக சூப்பரான 20 சமையல் குறிப்புகள் இதோ… சமைக்கும் போது மறக்காமல் இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணிப்பாருங்க! இன்றைய வேகமான வாழ்க்கையில் சமையலை சுலபமாகவும் சுவையாகவும் மாற்றுவது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. வீட்டில் தினசரி சமைக்கும் பெண்கள் மட்டுமல்லாமல், இளம் தலைமுறையும் இந்த எளிய டிப்ஸ்களை பயன்படுத்தி சமையலை எளிதாக்க முடியும்.
நீண்டநாள் பயன்படும் சமையல் ரகசியங்கள்
இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்தால் நிறம் மாறாமலும் நீண்ட நாட்களுக்கு கெடாமலும் இருக்கும். இந்த சின்ன டிப்ஸ், சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் தரத்தையும் ஆயுளையும் அதிகரிக்க உதவுகிறது. அதேபோல், முட்டையை வேக வைத்ததும் குளிர்ந்த நீரில் போட்டு வைத்தால் உரிப்பதற்கு சுலபமாக இருக்கும் என்பது தினசரி சமையலில் நேரத்தை மிச்சப்படுத்தும் முக்கிய வழி.
சமையலில் ஏற்படும் சிக்கல்களுக்கு எளிய தீர்வுகள்
பால் பொங்கி கீழே வடியாமல் இருக்க, காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வராது. தயிருக்கு உறை ஊற்றும் போது காம்பு நீக்காத பச்சை மிளகாயை அதனுடன் போட்டு வைத்தால் அதிகமாகப் புளிக்காது. இத்தகைய டிப்ஸ்கள் சமையலில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளைத் தடுக்க உதவுகின்றன.
சுவையை அதிகரிக்கும் சிறப்பு குறிப்புகள்
சாம்பார் செய்வதற்கு பருப்பு வேக வைக்கும் போது அதனுடன் நெய் சேர்த்து வேக வைத்தால் ருசியாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் போது இறுதியாக உப்பு சேர்க்கவும். ஆரம்பத்திலேயே சேர்த்தால் குழம்பு சுவையாக இருக்காது, அதே போல் நீர்த்துப் போகும். இத்தகைய குறிப்புகள் உணவின் சுவையை நேரடியாக மேம்படுத்துகின்றன.
சமையல் நேரத்தை குறைக்கும் டிப்ஸ்கள்
வெங்காயத்தின் தோலை உரித்து ப்ரிட்ஜில் வைத்து 10 நிமிடங்களுக்குப் பின் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது. வெண்டைக்காய் வாங்கி வந்ததும் அடி மற்றும் மேல் காம்பை நீக்கி ப்ரிட்ஜில் வைத்தால் முற்றாமல் இருக்கும். இதுபோன்ற டிப்ஸ்கள் சமையல் நேரத்தையும் உழைப்பையும் குறைக்க உதவுகின்றன.
ஆரோக்கியம் மற்றும் சுவை சேர்க்கும் யோசனைகள்
வடைக்கு மாவு அரைக்கும் போது கொஞ்சமாக முளைக்கட்டிய பச்சைப் பயறை சேர்த்தால், வடை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆம்லெட் செய்யும் போது வெங்காயத்துடன் பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்தால் முட்டை வாசனை வராது மற்றும் ருசியும் கூடும். இது போன்ற டிப்ஸ்கள் உணவின் சுவையையும் ஆரோக்கியத்தையும் ஒருசேர மேம்படுத்துகின்றன.
மாவு மற்றும் உணவு தயாரிப்பில் பயனுள்ள குறிப்புகள்
இட்லி அல்லது தோசை மாவு அரைக்கும் போது குளிர்ந்த தண்ணீரை ஊற்றி அரைத்தால் வெயில் காலத்தில் மாவு சீக்கிரம் புளிக்காமல் இருக்கும். வீட்டில் பன்னீர் செய்யும் போது மிச்சமாகும் தண்ணீரை வீணாக்காமல் மாவு பிசையும் போது சேர்த்தால் சப்பாத்தி சாஃப்டாக வரும். பூரிக்கு மாவு பிசையும் போது இரண்டு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும்.
சிறந்த சமையலுக்கான இறுதி டிப்ஸ்கள்
அடைக்கு மாவு அரைக்கும் போது கொஞ்சமாக ஊற வைத்த பட்டாணியைச் சேர்த்தால் சுவை சூப்பராகவும் சத்தானதாகவும் இருக்கும். சிக்கனில் கொஞ்சமாக தயிர், எலுமிச்சை சாறு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 15 நிமிடங்களுக்குப் பின் சமைத்தால் சிக்கன் பஞ்சு போல் இருக்கும். முட்டை கோஸ் சமைக்கும் போது கொஞ்சமாக இஞ்சியை துருவி சேர்த்து சமைத்தால் அதன் மணம் வாராது அதேபோல் கூடுதல் சுவையாகவும் இருக்கும். கோதுமை மாவில் மோர் சேர்த்துக் கரைத்து தோசை சுட்டால் சுவையாகவும் இருக்கும், அதே சமயம் மணமாகவும் இருக்கும். ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும் போது அதனுடன் கொஞ்சம் வறுத்த கொள்ளு பருப்பைச் சேர்த்தால் சுவையும் ஆரோக்கியமும் கூடும்.