இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ரூ1,000லிருந்து ரூ.7,500 ஆக உயரும் வாய்ப்பு? யாருக்கு நன்மை?
EPFO Big Update : ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ. 1,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் பணியாளர் ஓய்வூதிய திட்டம் - 95 ன் படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயரத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், பிஎஃப் திட்டத்தில் உள்ளவர்களுக்கும் மிக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி தற்போது மாதம் ரூ. 1,000 மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் பணியாளர் ஓய்வூதிய திட்டம் – 95ன் படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயரத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது பல ஆண்டுகளாக இந்திய அளவில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்த கோரிக்கையை முன் வைத்து வந்தனர். இன்றை காலகட்டத்தில் வாழ்வாதார செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் ரூ.1,000 ஓய்வூதியம் போதுமானதாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வந்தனற்.
பணியாளர் ஓய்வூதிய திட்டம் – 95ன் படி வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இந்த கோரிக்கைக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரை இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம் – எப்படி பயன்படுத்துவது




இந்த திட்டத்தினால் யாருக்கு நன்மை?
இந்த மாற்றம் அமலுக்கு வரும் பட்சத்தில் பணியாளர் ஓய்வூதிய திட்டம் – 95ன் படி ஓய்வூதியம் பெறும் பயனர்களுக்கு நேரடி நன்மை கிடைக்கும். குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட ஓய்வூதியதாரர்களுக்கு தினசரி செலவுகள், மருத்துவ செலவுகள் மற்றும் பணவீக்கத்தை குறைக்க இது நேரடியாக உதவும் என கூறப்படுகிறது. இதுவரை ரூ.1000 வரை பெற்று வந்தவர்களுக்கு ரூ.7500 பெரிய அளவில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்ட நிலையில் மேலும் இபிஎஃப்ஓ அமைப்பு பல புதிய மாற்றங்களையும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அந்த வகையில் பிஎஃப் சேமிப்புக்கு 8.25 சதவிகிதம் வட்டி வழங்கும் திட்டமும், பணம் பெறும் நடைமுறை மிக எளிதாக மாறும் முறையில் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இபிஎஃப்ஓ செயல்பாடுகள் முன்பை விட மிக எளிதாக மாறி வருகிறது.
இதையும் படிக்க : மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா?.. இத தெரிஞ்சுக்கோங்க!
இப்போது இந்த ஓய்வூதிய உயர்வு குறித்து இறுதி முடிவு எப்போது வெளியாகும் என்பது குறித்து அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டால், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரிய நிதி நிவாரணமாக இருக்கும்.
தற்போது இபிஎஃப்ஓ முழுமையாக டிஜிட்டல் முறையில் மாறி வருகிறது. அதன் படி பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகள் முன்பைக் காட்டிலும் மிக எளிதாக மாறி வருகிறது. ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் முறைகள் விரைவில் அமலுக்கு வரவிருக்கின்றன.