கேஸ் சிலிண்டர் முன்பதிவில் அமலுக்கு வரும் மாற்றம்?.. வெளியான முக்கிய தகவல்!
Gas Cylinder Booking Rules | ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில முக்கிய விதிகள் அமலில் உள்ளன. இந்த நிலையில், மே 2026 முதல் கேஸ் சிலிண்டர் முன்பதிவு குறித்து முக்கிய மாற்றங்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் போர் (Iran War) காரணமாக இந்தியாவில் கடுமையான கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது அரசு சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்த சிக்கலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் முன்பதிவு குறித்து முக்கிய சில மாற்றாங்கள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் முன்பதிவு குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் அமலுக்கு வர உள்ள மாற்றங்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போரால் கடும் தட்டுப்பாட்டில் கேஸ் சிலிண்டர்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக, எண்ணெய் கப்பல்கள் உலக நாடுகளை சென்று சேராமல் உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக இந்தியாவிலும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்தனர்.
இதையும் படிங்க : அதிகரிக்கும் யுபிஐ மோசடிகள் – இதையெல்லாம் பண்ணாதீங்க – எச்சரிக்கும் நிபுணர்கள்




கேஸ் முன்பதிவு காலத்தை மாற்றிய மத்திய அரசு
இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், மத்திய அரசு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கு ஒருமுறையும், நகர்புறங்களில் 20 முதல் 25 நாட்களுக்கு ஒருமுறையும் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய கால அவகாசத்தை நிர்ணயம் செய்தது. தற்போது, அதன் அடிப்படையில் தான் கேஸ் சிலிண்டர் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது பெரிய சிக்கல்.. வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!
2026, மே மாதம் முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்?
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு சிக்கல் இன்னும் முழுவதுமாக சீரடையாமல் உள்ள நிலையில், 2026 மே மாதம் முதல் சில முக்கிய விதிகள் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர் முன்பதிவு குறித்து தற்போது அமலில் உள்ள விதிகளை மையப்படுத்தி புதிய விதிகள் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமன்றி, தற்போது அமலில் உள்ள ஓடிபியை மையப்படுத்திய கேஸ் சிலிண்டர் புக்கிங் உள்ளிட்டவை நிரந்தரமாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.