AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் Vs மியூச்சுவல் ஃபண்ட்.. 16 ஆண்டுகளில் அதிக லாபம் தந்தது எது?

Gold Vs Mutual Fund Investment | பொதுமக்கள் முதலீடு செய்ய தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், கடந்த 16 ஆண்டுகளில் தங்கம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் இரண்டில் எது அதிக லாபம் தந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Apr 2026 00:08 AM IST
பொருளாதாரத்தை பாதுகாக்க சேமிப்பு அல்லது முதலீடு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இதன் காரணமாக பலரும் தங்களால் முடிந்த சேமிப்பு அல்லது முதலீடுகளை செய்து வருகின்றனர். தாங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ப அவர்கள் லாபமும் பெற்று வருகின்றனர். 

1 / 6
இந்தியாவை பொருத்தவரை இரண்டு வகையான முதலீடுகள் பிரபலமாக உள்ளது. ஒன்று தங்கத்தில் முதலீடு செய்வது, மற்றொன்று பங்குச்சந்தையில் முதலீடு செய்வது. பெரும்பாலான மக்களின் முதலீட்டு தேர்வாக இவை இரண்டு தான் உள்ளன. இந்த நிலையில், கடந்த 16 ஆண்டுகளில் தங்கம் மற்றும் பங்குச்சந்தை இவை இரண்டில் எது அதிக லாபத்தை தந்துள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 6
இந்திய பங்குச்சந்தை ஒரு நாள் ஏற்றத்தை சந்தித்தால் அடுத்த நாள் சரிவை சந்திப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், தங்கமோ 2025 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து 2026 ஆம் ஆண்டு தொடக்கம் வரை முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை கொடுத்துள்ளது. தங்கம் தற்போது பெரிய வளர்ச்சியில் இல்லை என்றாலும், மேலும் உயர்வை சந்திக்கும் என கூறப்படுகிறது.

Investment (2)

3 / 6
தங்கம் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாக HDFC Flxi Cap திட்டங்களை ஒப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. 2010 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.5 லட்சம் முதலீடு என்ற அடிப்படையில் கணக்கிட்டு அவர் முடிவை வெளியிட்டு இருக்கிறார். 

4 / 6
அதில் 2025 ஆம் ஆண்டு வரை ஈக்விட்டி தான் அதிக லாபம் தரும் முதலீடாக இருந்துள்ளது. ஆனால், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து தான் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை விட அதிக லாபம் தரும் முதலீடாக தங்கம் மாறியுள்ளது. 

5 / 6
ஒருவர் 16 ஆண்டுகளில் தங்கம் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ரூ.85 லட்சம் முதலீடு செய்திருந்தவர்களுக்கு தங்கம் ரூ.3.84 கோடி லாபம் தந்துள்ளது. இதுவே ஈக்விட்டி முதலீடு ரூ.3.46 கோடி லாபத்தை தந்துள்ளது. இந்த நிலையில், ஈக்விட்டி முதலீட்டை விடவும் அதிக லாபம் தந்ததாக தங்கம் உள்ளது. 

6 / 6
Follow Us