AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிகரிக்கும் யுபிஐ மோசடிகள் – இதையெல்லாம் பண்ணாதீங்க – எச்சரிக்கும் நிபுணர்கள்

தற்போது யுபிஐ செயலிகள் மூலம் போலி பேமெண்ட் கேட்டு கோரிக்கை அனுப்பும் சம்பங்கள் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ஒருவர் போல போலி கணக்கை உருவாக்கி அவரது பெயரில் QR கோட் அனுப்பி பணம் கேட்பது போன்ற மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

அதிகரிக்கும் யுபிஐ மோசடிகள் – இதையெல்லாம் பண்ணாதீங்க  – எச்சரிக்கும் நிபுணர்கள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 25 Apr 2026 17:00 PM IST

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வேகமாகவும் எளிதாகவும் மாற்றியுள்ள யுபிஐ, இன்றைக்கு பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. மளிகைக் கடைகள் முதல் அரசு பேருந்துகள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ பயன்பாடு நுழைந்துவிட்டது. உதாரணமாக ஒரு டீ வாங்க வேண்டும் என்றால் கூட நாம் யுபிஐ செயலிகளை தான் படன்படுத்துகிறோம். எந்த அளவுக்கு எளிய மக்களிடம் யுபிஐ பயன்பாடு சென்றடைந்திருக்கிறதோ அதே அளவுக்கு யுபிஐ வழியாக நடைபெறும் மோசடிகளும் அதிகரித்திருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது போலி பேமெண்ட் கேட்டு கோரிக்கை அனுப்பும் சம்பங்கள் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ஒருவர் போல போலி கணக்கை உருவாக்கி அவரது பெயரில் QR கோட் அனுப்பி பணம் கேட்பது, பிஷிங் லிங்க்குகள் அனுப்பி ஏமாற்றுதல், கியூஆர் கோட் மோசடிகள், பின் கேட்டு ஏமாற்றுதல் என இந்த மோசடிகள் அனைத்து வயதினரையும் குறிவைத்து அனுப்பப்படுகின்றன.

இதையும் படிக்க : தங்கம் Vs மியூச்சுவல் ஃபண்ட்.. 16 ஆண்டுகளில் அதிக லாபம் தந்தது எது?

போலி யுபிஐ கோரிக்கையை எப்படி தெரிந்து கொள்வது?

நாம் பணம் அனுப்பும்போது யுபிஐ செயலியில் பெயர் சரியாக இருக்கிறதா என சரிபார்க்கவும். அதே போல யுபிஐ ஐடி சரியாக இருக்கிறதா என ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். கியூஆர் கோட் நம்பகமானதான என பார்க்கவும். உங்கள் நண்பர்களிடம் இருந்தோ, உறவினர்களிடம் இருந்தோ பணம் கேட்டு கோரிக்கை வந்தால், ஒருமுறை அந்த நபரை நேரடியாக தொடர்பு கொண்டு, நீங்கள் பணம் கேட்டு கோரிக்கை அனுப்பியிருந்தீர்களா என உறுதி செய்து கொள்ளுங்கள். நாம் செய்யும் ஒரு சிறிய தவறே உங்கள் பணத்தை நாம் இழப்பதற்கு காரணமாக அமையும்.

ஒருவர் உங்களுக்கு பரிசோ அள்ளது பணமோ அனுப்ப வேண்டும் என யுபிஐ பின் கேட்டால் அனுப்பாதீர்கள், பணம் அனுப்ப மட்டுமே பின் தேவை. பணம் பெற பின் தேவையில்லை. நம் யுபிஐ ஐடி கொடுத்தாலே போதும். ஏனெனில் வயதானவர்களை குறிவைத்து பணம் அனுப்ப வேண்டும் யுபிஐ பின் சொல்லுங்கள் என கேட்கும் செயல்கள் அதிகரித்திருக்கிறது.

இதையும் படிக்க : LPG , CNG, PNG, LNG – இந்த 4 வகை எரிவாயுக்களில் உள்ள வித்தியாசம்? எது பாதுகாப்பானது?

வங்கி அதிகாரிகள் போல பேசுபவர்கள், கஷ்டமர் கேர் என்று சொல்கிறவர்கள், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க்குகள் இவற்றின் மூலம் யுபிஐ மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அப்படி நமக்கு தெரியாதவர்களின் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம். மேலும் யாரேனும் உங்களுக்கு சம்பந்தமில்லாத செயலிகளை உங்கள் போனில் நிறுவ சொன்னால் மறுத்துவிடுங்கள். மேலும் தெரியாத நபர்களிடம் ஓடிபி, பின், வங்கி விவரங்களை பகிர வேண்டாம்.

உங்கள் யுபிஐ செயலிகளில் தினமும் பணம் அனுப்பும் வரம்பை அமைத்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அனுப்பும்படி மாற்றி வைத்துக்கொண்டால், உங்களிடம் இருந்து யுபிஐ மோசடி வெகுவாக குறையும்.

 

 

Follow Us