AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

LPG , CNG, PNG, LNG – இந்த 4 வகை எரிவாயுக்களில் உள்ள வித்தியாசம்? எது பாதுகாப்பானது?

Energy Types Explained : இந்தியாவில் எல்பிஜி, எல்என்ஜி, சிஎன்ஜி, பிஎன்ஜி என 4 வகை எரிவாயுக்கள் கிடைக்கின்றன. இந்த 4 வகை எரிவாயுக்களுக்கும் உள்ள வித்தியாசம் மற்றும் எது பாதுகாப்பானது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம் .

LPG , CNG, PNG, LNG –  இந்த 4 வகை எரிவாயுக்களில் உள்ள வித்தியாசம்?  எது பாதுகாப்பானது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Apr 2026 19:36 PM IST

இந்தியாவில் எரிவாயு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், எல்பிஜி, எல்என்ஜி, பிஎன்ஜி, சிஎன்ஜி போன்ற இந்தியாவில் கிடைக்கும் எரிவாயு குறித்து மக்கள் குழப்பம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஈரான் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரினை பகுதியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் எரிவாயு விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் எல்பிஜி மற்றும் எல்என்ஜி எரிவாயவுக்கு பற்றாக்குறை நிலவும் சூழல் உருவாகியுள்ளது. இதனை சமாளிக்க, மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை பயன்படுத்தி எரிவாயு தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எல்பிஜி என்றால் என்ன?

Liquefied Petroleum Gas எனப்படும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது புரோபேன் மற்றும் புட்டேன் போன்ற வாயுக்களால் உருவாகிறது. இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு எல்பிஜி சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகன்றன.

இதையும் படிக்க : பொதுப் பெட்டிகள் ஏன் ரயிலின் முன் மற்றும் பின்பகுதியில் மட்டும் அமைந்துள்ளன?

சிஎன்ஜி என்றால் என்ன?

Compressed Natural Gas எனப்படும் சிஎன்ஜி எரிவாயு வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது சுற்றுச்சூழலை பாதிக்காது என கூறப்படுகிறது. மீத்தேன் வாயுவால் உருவாகும் இந்த எரிவாயு அதிக அழுத்தத்தில் சேமிக்கப்படுகிறது. இது காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவுகிறது. டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைக்க உதவுகிறது.

பிஎன்ஜி என்றால் என்ன?

Piped Natural Gas என்பது குழாய் மூலம் நேரடியாக வீடுகளுக்கு வரும் சமையல் எரிவாயு. இது மீத்தேன் அடிப்படையில் உருவாவதால் அதிக புகையின்றி எரியும் என கூறப்படுகிறது. இதற்கு சிலிண்டர் தேவைப்படாது. மேலும் இந்தியா முழுவதும் பெரும்பாலான நகரங்களில் இதன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

எல்என்ஜி என்றால் என்ன?

Liquefied Natural Gas எனப்படும் எல்என்ஜி என்பது இயற்கை எரிவாயுவை -160 டிகிரி வரை குளிர்வித்து திரவமாக மாற்றப்படுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இது கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்டு மீண்டும் வாயுவாக மாற்றி பயன்படுத்தப்படுகிறது. இந்த எல்என்ஜியை கத்தார் போன்ற நாடுகள் நமக்கு வழங்குகின்றன.

இதையும் படிக்க : 63-ல் இருந்து ரூ.116 அமெரிக்க டாலர்களாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. மத்திய அமைச்சகம் வெளியிட்ட தரவு!

எது பாதுகாப்பானது?

இந்த 4 வகை எரிவாயுக்களில் பிஎன்ஜி, சின்ஜி ஆகியவற்றை பொறுத்தவரை அவை காற்றை விட லேசானது என்பதால் அது கசிவு ஏற்பட்டால் காற்றில் எளிதாக கரைந்து விடும். இதனால் இந்த 2 வகை எரிவாயுவும் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன. ஆனால் எல்பிஜி காற்றை விட கனமானது என்பதால் அது தரையில் படிந்து ஆபத்தை ஏர்படுத்தும். பிஎன்ஜியை பொறுத்தவரை அதன் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் அது வசதியானதாக பார்க்கப்படுகிறது.

Follow Us