AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

63-ல் இருந்து ரூ.116 அமெரிக்க டாலர்களாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. மத்திய அமைச்சகம் வெளியிட்ட தரவு!

Crude Oil Price Increased To 116 Rupees From 63 Rupees | மேற்கு ஆசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்தது. குறிப்பாக 63 அமெரிக்க டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை ஒருசில மாதங்களிலேயே 116 ஆக உயர்ந்துள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Apr 2026 23:54 PM IST
மேற்கு ஆசியா போர் காரணமாக வெறும் 63 அமெரிக்க டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை ஒருசில மாதங்களிலேயே 116 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

1 / 5
அதாவது 2026, ஜனவரி மாதத்தில் கச்சா எண்ணெய் கொண்ட பீப்பாய் ஒன்று 63 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அது மார்ச் மாதத்தில் பீப்பாய் ஒன்று 113 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. பிறகு ஏப்ரல் மாதத்தில் அது 116 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது என்று கூறியுள்ளார். 

2 / 5
இவ்வாறு கடுமையாக  உயர்ந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உலக அளவில் திடீர் விலை உயர்வு ஏற்பட்டபோதும், அண்டை நாடுகள் உடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைவாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

3 / 5
குறிப்பாக வீட்டுக்கு தேவையான சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், எந்த ஒரு விநியோகிஸ்தரிடமும் சிலிண்டர் பற்றாக்குறை என்பது இல்லை என்றும் கூறியுள்ளார். சிலிண்டர் விநியோகம் 93 சதவீதம் என்ற அளவில் திறமையாக கையாளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். 

4 / 5
வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விற்பனை அதிகரித்துள்ளது. புலம்பெயர் மக்களின் வசதிக்காக 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது என்று கூறியுள்ளார். பெட்ரோலிய இயற்கை எரிவாயுக்காக புதியதாக 5.68 லட்சம் நுகர்வோர்கள் பதிவு செய்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

5 / 5
Follow Us