ஊழியர் நோட்டீஸ் பீரியடை கழிக்கவில்லை என்றால் குற்றமா?.. சட்டம் கூறுவது என்ன?
Notice Period For Employees | அனைத்து விதமான நிறுவனங்களும் ஊழியர்கள் பணியில் இருந்து நிற்பதற்கான நோட்டீஸ் பீரியர் வரம்பை வைத்திருக்கும். இந்த நிலையில், நோட்டீஸ் பீரியடை கழிக்காமல் வேறு நிறுவனத்திற்கு செல்வது குற்றமா, அதனால் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு வேளையில் இருந்து மற்றொரு வேளைக்கு மாறும் ஊழியருக்கு புதிய நிறுவனத்திற்கு செல்கிறோம், கூடுதல் வருமானம், புதிய நபர்களை சந்திக்க போகிறோம் என்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் எதிரில் இருந்தாலும், அவர்களுக்கு சற்று மன கசப்பை தரக்கூடிய விஷயமாக நோட்டீஸ் பீரியட் (Notice Period) உள்ளது. புதிய நிறுவனத்தில் உடனடியாக சேர வேண்டும் என இருக்கும் ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய சிக்கலாக மாறிவிடும். இந்த நிலையில், நோட்டீஸ் பீரியடை கட்டாயம் கழிக்க வேண்டுமா, அதனை மீறி நிறுவனத்தில் இருந்து சென்றால் என்ன நடக்கும், சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
நோட்டீஸ் பீரியட் குறித்து சட்டம் கூறுவது என்ன?
நோட்டீஸ் பீரியட் குறித்து உலக அளவில் எந்த விதமான சட்டங்களும் அமலில் இல்லை. இந்த நோட்டீஸ் பீரியட் நிறுவனங்களை மையப்படுத்தியதாக உள்ளது. தங்களது ஊழியர்கள் எவ்வளவு காலம் நோடீஸ் பீரியடில் பணி செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்கின்றனர். ஊழியர்கள் பணியில் சேறும்போது இது தொடர்பாக அவர்கள் ஒப்புதல் பெறுவர். ஊழியர்கள் அளிக்கும் ஒப்புதல்களின் அடிப்படையில் தான் அவர்கள் நோட்டீஸ் பீரியடில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.
இதையும் படிங்க : நிலையான வைப்பு நிதி திட்டங்கள்.. 7.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
நோட்டீஸ் பீரியடில் பணி செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்?
நோட்டீஸ் பீரியடில் பணி செய்யாமல் இருப்பது தங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் பாய செய்யும் என ஊழியர்கள் நினைக்கின்றனர். ஆனால், அது உண்மை அல்ல. நோட்டீஸ் பீரியட் என்பது நிறுவனத்திற்கும், ஊழியருக்குமான உடன்பாடு ஆகும். அதனை மீறும் பட்சத்தில் அந்த ஊழியர் மீது நிறுவனம் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவை உடன்பாட்டை மீறியதாக இருக்குமே தவிற குற்றமாக கருதப்படாது.
இதையும் படிங்க : ஆதார் மட்டும் போதும்… 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை ஈஸியா வாங்கலாம் – எப்படி தெரியுமா?
எனவே ஒரு ஊழியர் நோட்டீஸ் பீரியடில் பணியாற்றவில்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் பாய்வதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.