AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிலையான வைப்பு நிதி திட்டங்கள்.. 7.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

High Interest Fixed Deposit Schemes | இந்தியாவில் உள்ள ஏராளமான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒன்று முதல் பத்து ஆண்டுகள் வரை கால அளவீடு கொண்ட திட்டங்களுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டங்கள்.. 7.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Apr 2026 23:49 PM IST

சேமிப்பு (Savings) அல்லது முதலீட்டை (Investment) தொடங்க சிறந்ததாக உள்ள திட்டம் தான் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit). இந்த திட்டம் பாதுகாப்பானதாக உள்ள நிலையில், சிறந்த லாபத்தையும் வழங்குகிறது. இந்த நிலையில், குறைந்த தொகையில் முதலீட்டை தொடங்க வேண்டும் என நினைக்கும் நபர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் இந்த திட்டத்தை வழங்கும் நிலையில், ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி திட்டங்கள் – சிறந்த வட்டி தரும் வங்கிகள்

சில வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிக வட்டி தருகின்றன.

பஞ்சாப் வங்கி

இந்த வங்கியில் அதிகப்படியாக 666 நாட்களுக்கான திட்டத்திற்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு 6.35 சதவீதம், 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 6.35 சதவீதம், 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 6.45 சதவீதம் மற்றும் 10 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 6.35 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : இந்த அட்சய திருதியைக்கு தங்கத்தில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. முழு விவரம்!

மகராஷ்டிரா வங்கி

இந்த வங்கியில் அதிகப்படியாக 400 நாட்களுக்கான திட்டத்திற்கு 7.15 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு 6.70 சதவீதம், 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 5.75 சதவீதம், 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 5.50 சதவீதம் மற்றும் 10 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 5.50 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

இந்த வங்கியில் அதிகப்படியாக 444 நாட்களுக்கான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு 6.75 சதவீதம், 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 6.80 சதவீதம், 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 6.60 சதவீதம் மற்றும் 10 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 6.80 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : இனி இபிஎஃப்ஓ தளத்தில் யுஏன் எண் ஆக்டிவேட் செய்ய முடியாது.. வெளியான முக்கிய அறிவுப்பு!

பாங்க் ஆஃப் இந்தியா

இந்த வங்கியில் அதிகப்படியாக 5 முதல் 10  ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 1 ஆண்டுக்கான திட்டத்திற்கு 6.60 சதவீதம், 3 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 6.75 சதவீதம், 5 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 6.90 சதவீதம் மற்றும் 10 ஆண்டுகளுக்கான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

Follow Us