AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த அட்சய திருதியைக்கு தங்கத்தில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. முழு விவரம்!

Gold Investment For Akshaya Tritiya | அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குவது பெரும்பாலான நபர்களின் பழக்கமாக உள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு அட்சய திருதியைக்கு தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு இந்த சில விஷயங்களை தெரிந்துக்கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்.

இந்த அட்சய திருதியைக்கு தங்கத்தில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. முழு விவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Apr 2026 12:29 PM IST

அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவது பாரம்பரியமாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினத்தில் ஒரு கிராம் தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என பலரும் நினைப்பர். நாளை (ஏப்ரல் 19, 2026) அட்சய திருதியை கொண்டாப்பட உள்ள நிலையில், ஏராளமான மக்கள் தங்கம் வாங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த முறை தங்கம் வாங்குவதற்கு முன்பு இந்த சில விஷயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. அதாவது, இந்த அட்சய திருதியைக்கு எந்த வகையில் தங்கம் வாங்குவது சிறப்பானது என தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்தியர்களின் பாரம்பரியத்துடன் ஒன்றிணைந்துள்ள தங்கம்

இந்தியர்களை பொருத்தவரை தங்கம் ஒரு விலை உயர்ந்த உலோகமாக மட்டுமன்றி, சிறந்த முதலீடாகவும், பாரம்பரியமாகவும் உள்ளது. ஏதேனும் சுப  காரியங்கள் நடக்கும்போதெல்லாம் ஒரு கிராம் தங்கமாவது அந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும். அந்த அளவுக்கு தங்கம் இந்தியர்களின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் தான் அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவதும் பாரம்பரியமாக உள்ளது. அன்றைய தினத்தில் தங்கம் வாங்குவதன் மூலம் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளதால் பெரும்பாலான பொதுமக்கள் அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க : மாத செலவுகளை Manage செய்ய முதன்மை பட்ஜெட்.. இப்படி பண்ணா சிக்கல் இல்லை!

இந்த அட்சய திருதியைக்கு எப்படி தங்கத்தில் முதலீடு செய்வது?

முன்பு தங்கத்தில் முதலீடு செய்ய ஒருசில வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. அதாவது தங்க நகைகள் மற்றும் நாணயங்கள். ஆனால், தற்போது அப்படி அல்ல. தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு அம்சங்கள் உள்ளன. பல வகைகளில் தங்கத்தில் முதலீடு செய்ய முடியும். உதாரணமாக தங்க நகை, ஈடிஎஃப் மற்றும் எஸ்ஜிபி ஆகியவை உள்ளன. இவற்றில் உங்களுக்கு எது சிறந்த திட்டம் என்பதை உணர்ந்துக்கொண்டு முதலீடு செய்யுங்கள்.

இதையும் படிங்க : இந்தியாவில் கேஸ் சிலிண்டர் சிக்கல் தீர 3-4 ஆண்டுகள் ஆகும்.. அதிகாரிகள் சொன்ன பகீர் தகவல்!

தற்போது தான் முதல் முறையாக தங்கத்தில் முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால் உங்களுக்கு தங்கம் சிறந்த முதலீடாக இருக்கும். காரணம், இதில் சிறிய அளவு முதலே முதலீடு செய்ய முடியும். ஏற்கனவே டிமேட் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்க ஈடிஎஃப்களில் முதலீடு செய்யலாம். இதுவே நீண்ட காலம் முதலீடு செய்து அதிக பலனை பெற விரும்புகிறீர்கள் என்றால் உங்களுக்கு எஸ்பிஜி சிறந்த தேர்வாக இருக்கும்.

Follow Us