Gold Price : சென்னையில் தங்கம் விலை உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Price Increased In Chennai | ஈரான் போர் காரணமாக சென்னையில் தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், இன்றைய நிலவரம் குறித்து பார்க்கலாம்.
சென்னை, ஏப்ரல் 16 : ஈரான் போர் (Iran War) காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 16, 2026) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது இன்று தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்கலாம்.
ஈரான் போரால் ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே உருவெடுத்துள்ள போர் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக சர்வதேச அளவில் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், புவிசார் பதற்றங்களும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : சிக்கல் இல்லாமல் மாத செலவுகளை கையாள்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.