Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Film Awards: 2016 முதல் 2022.. சிறந்த நடிகர் – நடிகைகள் யார்? தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

Tamil Nadu Film Awards 2016-2022: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் இருக்கிறார்கள். அவர்களை கௌரவப்படுத்தும்விதமாக தமிழக அரசும் திரைப்பட விருதுகள் வழங்குவது உண்டு. அந்த விதத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான சிறந்த நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது யார் யார் என விவரமாக பார்க்கலாம்.

Tamil Nadu Film Awards: 2016 முதல் 2022.. சிறந்த நடிகர் – நடிகைகள் யார்? தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!
தமிழ்நாடு திரைப்பட விருதுகள் 2026Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 29 Jan 2026 21:05 PM IST

கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema) நடிகர், நடிகைகளின் நடிப்பும் ரசிகர்களை மிரளவைத்து வருகிறது. அந்த விதத்தில் அவர்களின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெறாவிட்டாலும், விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த விதத்தில் பல படங்களுக்கும் விருதுகள் கிடைத்துவருகிறது. மேலும் தமிழ் சினிமாவையும் மற்றும் அதில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை கௌரவிக்கும் விதத்தில் தமிழக அரசின் (Tamil Nadu Government) சார்பாக விருதுகள் வழங்கப்படுவது வழக்கமே. அந்த விதத்தில் கடந்த 2025ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் சிறந்த பிரபலங்களுக்கு கலைமாமணி விருதுகள் (Kalaimamani Awards 2025) வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த 2026ம் ஆண்டில் தமிழக அரசின் சார்பாக திரைப்பட விருதுகள் விழா (Tamil Nadu Government Film Awards) நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் நகைச்சுவை நடிகர்கள் என தமிழ் சினிமாவை கௌரவிக்கும் வண்ணத்தில் பலருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கான சிறந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: விது – ப்ரீத்தி அஸ்ரானியின் ’29 தி பிலிம்’ படத்தின் ஷூட்டிங் ஓவர்.. படக்குழு வெளியிட்ட வீடியோ இதோ!

2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான சிறந்த நடிகர்களுக்கான தமிழக திரைப்பட விருது லிஸ்ட் :

  •  2015ம் ஆண்டு புரியாத புதிர் என்ற படத்திற்காக விஜய் சேதுபதி பெறவுள்ளார்.
  • 2017ம் ஆண்டு தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்காக கார்த்திக்கு சிறந்த நடிகருக்கான விருது.
  • 2018ம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை வட சென்னை படத்திற்காக தனுஷ் பெறவுள்ளார்.
  • 2019ம் ஆண்டு ஒத்த செருப்பு படத்திற்காக ஆர். பார்த்திபன் பெறவுள்ளார்.
  • 2020ம் ஆண்டின் சூரரைப் போற்று படத்திற்காக சூர்யா, 2021ம் ஆண்டின் சார்பட்டா பரம்பரை படத்திற்காக ஆர்யா மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை டாணாக்காரன் படத்திற்காக விக்ரம் பிரபு போன்ற நடிகர்கள் பெறுகின்றனர்.

இதையும் படிங்க : மகேஷ் பாபு – ராஜமௌலியின் வாரணாசி பட ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான சிறந்த நடிகைகளுக்கான தமிழக திரைப்பட விருது லிஸ்ட் :

  • 2016ம் ஆண்டு பாம்பு சட்டை என்ற படத்திற்காக கீர்த்தி சுரேஷ் பெறவுள்ளார்.
  • 2017ம் ஆண்டு அறம் படத்திற்காக நயன்தாரா பெறவுள்ளார்.
  • 2018ம் ஆண்டிற்கான சிறந்த நடிகை என்ற விருதை செக்கச் சிவந்த வானம் படத்திற்காக ஜோதிகா பெறவுள்ளார்.
  • 2019ம் ஆண்டிற்கான அசுரன் படத்திற்கான விருது மஞ்சு வாரியருக்கும், 2020ம் ஆண்டு சூரரை போற்று படத்திற்காக அபர்ணா பாலமுரளிக்கும், 2021ம் ஆண்டில் லிஜிமோல் ஜோஸிற்கு ஜெய் பீம் படத்திற்காகவும், 2022ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது கார்கி படத்திற்காக சாய் பல்லவிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.