Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kalaimamani Awards: தமிழக அரசின் கலைமாமணி விருது… முதலமைச்சரிடம் விருதை பெற்ற திரைப்பிரபலங்கள்!

Tamil Nadu Kalaimamani Winners: தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் சினிமா இரபலங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் கலைமாமணி. கடந்த 2021, 22, 23, ஆண்டிற்கான கலைமாமணி விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று 2025 அக்டோபர் 11ம் தேதியில் சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது.

Kalaimamani Awards: தமிழக அரசின் கலைமாமணி விருது… முதலமைச்சரிடம் விருதை பெற்ற திரைப்பிரபலங்கள்!
கலைமாமணி விருது வெற்றியாளர்கள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Oct 2025 20:07 PM IST

கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில்தான் இந்திய அரசின் சார்பாக 71வது தேசிய திரைப்பட விருதுகள் (National Film Awards) வழங்கும் விழா நடைபெற்றிருந்தது. இது ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கௌரவிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல, தமிழ் நாடு அரசின் (Tamil Nadu Government) சார்பாக, தமிழ் சினிமா பிரபலங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் கலைமாமணி (Kalaimamani Award). இந்த விருது வழங்கும் விழாவை தமிழகத்தில் இயல் இசை நாடக மன்றமானது நடத்திவருகிறது. அந்த வகையில் இந்த விருது தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் முதல் இசையமைப்பாளர் வரை, சினிமா பிரபலங்களை கௌரவிக்கும் விதத்தில் தமிழக அரசு வழங்கிவருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டிலும் தமிழக அரசு இந்த கலைமாமணி விருதை நடத்தியுள்ளது. கடந்த 2021, 20222, 2023ம் ஆண்டிற்கான விருதுகளை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அந்த வகையில் இன்று 2025 அக்டோபர் 11ம் தேதியில் சென்னையில் இந்த கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M.K. Stalin), துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Deputy Chief Minister Udhayanidhi Stalin) கலந்துகொண்டிருந்தனர். மேலும் விழாவில் நடிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். மொத்தமாக 90 பிரபலங்களுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ’’அந்த நடிகை ஓவர் திறமை.. நான் வேண்டாமென்றேன்’’.. பிரதீப் ரங்கநாதன் புகழ்ந்த நடிகை!!

கலைமாமணி விருதை வென்ற தமிழ் பிரபலங்கள் புகைப்படங்கள் :

2023ம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் கே மணிகண்டன் பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான விருதை விக்ரம் பிரபு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவும் பெற்றிருந்தார்.

சிறந்த நடிகைக்கான கலைமாமணி விருது :

2021 , 2022, மற்றும் 2023ம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருது நடிகை சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கேடயம் மற்றும் பதக்கத்தை நடிகை சாய் பல்லவி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கையால் பெற்றுக்கொண்டார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான கலைமாமணி :

2021, 2022, 2023 ஆண்டிற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, அனிருத் ரவிச்சந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கையால் விருதை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்

2021, 2022, 2023 கலைமாமணி விருது பெற்றப் பிரபலங்கள்:

இந்த கலைமாமணி விருதை , இயக்குநர் என். லிங்குசாமி மற்றும் பாடகி சுஜாதா மோகன், என பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். மேலும் இசைக்கான எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பாடகர் கே.ஜே.யேசுதாஸிற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.