AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்

RJ Balaji: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகன் மற்றும் இயக்குநர் என தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றார் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் கருப்பு. இந்தப் படம் குறித்த அப்டேட் தற்போது ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.

கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்
ஆர்.ஜே.பாலாஜிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Oct 2025 18:48 PM IST

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் 45-வது படமாக உருவாகியுள்ள படம் கருப்பு. முன்னதாக இவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து கருப்பு படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார் நடிகர் சூர்யா. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார். படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் சூர்யாவின் நடிப்பில் முன்னதாக வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற படத்தைப் போல உள்ளது என்பது குறித்து கருத்துகளும் ரசிகர்களிடையே சமூக வலைதளதில் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்ற நிலையில் முன்னதாக படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏன் என்றால் கருப்பு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படம் நிச்சயமாக பண்டிகை காலத்தில் தான் வெளியாகும் என்று தெரிவித்ததால் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தின் சில பணிகள் முடிவடைய தாமதம் ஆனதால் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவில்லை என்பதைப் படக்குழு முன்னதாகவே அறிவித்தது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அளித்தப் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தீபாவளிக்கு வெளியாகும் கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்:

அதன்படி ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது, கருப்பு படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தோம், ஆனால் விரிவான CG வேலைகள் காரணமாக அதை வெளியிட முடியவில்லை. எனக்கு இந்தப் படம் ரொம்பவே பிடிச்சிருந்தது. என் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர் பிரபுவும் எஸ்.ஆர்.பிரகாஷ் அவர்களும் இதை ரொம்பவே ஆர்வமாப் பார்த்தாங்க, அவங்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. மேலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்றும் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… என்னது பிக்பாஸ் வீட்டில் போன் யூஸ் பன்றாங்களா? வைரலாகும் வீடியோ

ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மமிதா பைஜூ கோ கோ வீரராக நடித்த இந்தப் படத்தை பார்த்து இருக்கீங்களா? அப்போ இந்த கோ கோ படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்

Follow Us