என்னது பிக்பாஸ் வீட்டில் போன் யூஸ் பன்றாங்களா? வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ரசிகர்களிடையே நல்ல வர வேற்பைப் பெற்று வருகின்றது. தற்போது ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருவதால் 1 மணி நேர நிகழ்ச்சியில் காட்டாத பல விசயங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் (Bigg Boss Tami) நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் தமிழிலும் கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் கடந்த 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது பலதரப்பட்ட மன நிலை உடைய மக்களை ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள் தங்க வைத்து அவர்களுக்கு பல போட்டிகளை நடத்துவதே ஆகும். அந்தப் போட்டிகள் அனைத்திலும் வெற்றிப் பெற்று வெளியே உள்ள மக்களின் மனதையும் யார் வெள்கிறார்களோ அவர்களே இறுதியாக டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 100 நாட்களுக்கும் அவர்கள் கொடுத்த வீட்டிலேயே வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் வாழ்வதே மிகப்பெரிய டாஸ்காக இருக்கும். மொபைல் போன், டிவி என எந்த வித டெக்னாலஜியும் பிக்பாஸ் வீட்டில் இருக்காது. அந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களுடன் மட்டுமே பழகி போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய நோக்கமாகும். இந்த நிலையில் தமிழில் கடந்த 8 சீசன்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள் என 20 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர்.




பிக்பாஸ் வீட்டில் போன் யூஸ் பன்றாங்களா?
வெளியுலக தொடர்பு எதுவும் இருக்கக்கூடாது என்ற நிகழ்ச்சியின் நோக்கம் தற்போது மாறிவிட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதன்படி கடந்த 5-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் மொபைல் போன் பயன்படுத்தப்படுவதாக இணையத்தில் சில தகவல்கள் பரவி வந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர் கானா வினோத் தனது மொபைல் போன் குறித்து பேசுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை. இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி பேசும் போதே இந்த விசயத்திற்கு தெளிவு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்ற்னர்.
Also Read… ஆன்மீக சுற்றுழா சென்றுள்ள ரஜினிகாந்த் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்
இணையத்தில் வைரலாகும் போன் தொடர்பான வீடியோ:
View this post on Instagram
Also Read… மோகன்லாலின் பீரியட் ஆக்ஷன் படமான விருஷபா ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்!