AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கத்தார் தெலுங்கானா திரைப்பட விருதுகள் 2025: சிறந்த நடிகை விருதை வென்ற ராஷ்மிகா மந்தனா

Gaddar Telangana Film Awards 2025: கத்தார் தெலுங்கானா திரைப்பட விருதுகள் 2025-ம் ஆண்டிற்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் திரைத்துறையில் யார் எல்லாம் விருதுகளை வென்றுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கத்தார் தெலுங்கானா திரைப்பட விருதுகள் 2025: சிறந்த நடிகை விருதை வென்ற ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Mar 2026 15:41 PM IST

தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதன்படி கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 5 படங்களில் நடித்து இருந்தார். இவர் நடித்து இருந்த 5 படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாயகியை மையமாக வைத்து தெலுங்கு சினிமாவில் வெளியான தி கேர்ள்ஃப்ரண்ட் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இயக்குநர் ராகுல் ரவீந்திரன் எழுதி இயக்கி இருந்த இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் சார்பாக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தயாரித்து இருதார். இசையமைப்பாளர் பிரஷாந்த் ஆர் விகாரி இசையமைத்து இருந்த நிலையில் படத்தை போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கான அரசால் கொடுக்கப்படும் கத்தார் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தார் தெலுங்கானா திரைப்பட விருதை வென்ற ராஷ்மிகா மந்தனா:

நடிகை ராஷ்மிகா மந்தனா பூமா தேவி என்ற கதாப்பாத்திரத்தில் தி கேர்ள்ஃபிரண்ட் படத்தில் நடித்து இருந்தார். இதில் ஆண்களால் மிகவும் கட்டுப்படுத்தப்படும் பெண்ணாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா அந்த அடுக்குதல்களில் இருந்து எப்படி வெளியேறினார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்திற்காக நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது விருதை வென்றுள்ளார். அதன்படி தெலுங்கான அரசால் வழங்கப்படும் கத்தார் தெலுங்கானா திரைப்பட விருதுகள் 2025-ல் நடிகை ராஷ்மிகா மந்தனா சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார். இதுகுறித்து படக்குழு பதிவை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

Also Read… ஆர்.ஜே.பாலாஜிக்கும், கருப்பு பட தயாரிப்பாளருக்கும் பிரச்சனையா? சுருக்கமாக பதில் கொடுத்த தயாரிப்பாளர்!

தி கேர்ள்ஃப்ரண்ட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Rachitha Mahalakshmi: சின்னத்திரையில் வாய்ப்புகள் வந்தால் சந்தோஷமாக செல்வேன்- ரச்சிதா மகாலட்சுமி பேச்சு!

Follow Us