லைஃப்ல நீ ஒரு விசயத்த லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணா… டியூட் படத்தின் ட்ரெய்லர் இதோ!
Dude Movie Trailer: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் டியூட். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வருகிறார் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganadhan). இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களிடையே எப்படி மாபெரும் வரவேற்பைப் பெற்றதோ அதேப் போல இவர் நாயகனாக நடித்தப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் டிராகன் படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் டியூட் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்துடன் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த முடிவு நிச்சயமாக ஒரு படத்தை பாதிக்கும் என்பதை புரிந்துகொண்டு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் தீபாவளி வெளியிட்டில் இருந்து வெளியேறியது.
இதனைத் தொடர்ந்து தீபாவளி ரேசில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படம் மட்டும் பங்கேற்கிறது. இந்தப் படத்துடன் தீபாவளி ரேசில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன், ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் போட்டிப் போட உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து படங்களில் ட்ரெய்லர்களை படக்குழு வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.




இந்த உடம்ப வச்சுட்டு சண்டைக்கி போறீயே?
அதில் பிரதீப் ரங்கநாதன் மிகவும் ஜாலியான பையனாக வலம் வருகிறார். அவரது வாழ்க்கையில் நடிகை மமிதா பைஜூ வர வாழ்க்கை மாறுகிறது. மேலும் காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று இந்தப் படத்தில் அனைத்தும் இருப்பது ட்ரெய்லரைப் பார்க்கையில் தெரிகிறது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, ஆர்.சரத் குமார், ஹிருது ஹாரூன், ரோகினி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் என பலர் நடித்துள்ளனர். படம் வருகின்ற 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… கார்த்தியின் வா வாத்தியார் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு
டியூட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Entertainment goes in overdrive mode with the DUDE’S TOP GEAR ❤🔥#DudeTrailer out now 💥💥
Tamil
▶️ https://t.co/bKroSgx8YNTelugu
▶️ https://t.co/H7qrqz40Ks#Dude Grand Festive Release on October 17th in Tamil & Telugu ✨⭐ing ‘The Sensational’ @pradeeponelife
🎬… pic.twitter.com/ofWJOjbCvC— Mythri Movie Makers (@MythriOfficial) October 9, 2025
Also Read… சிவகார்த்திகேயனின் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு – வைரலாகும் வீடியோ