Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகார்த்திகேயனின் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு – வைரலாகும் வீடியோ

Venkat Prabhu: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக் இவர் இயக்க உள்ள படம் குறித்து தற்போது பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு – வைரலாகும் வீடியோ
சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Oct 2025 12:28 PM IST

கோலிவுட் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சென்னை – 600028 என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் வெங்கட் பிரபு (Director Venkat Prabhu). இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பு இவர் பலப் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநராக இவர் அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கின்ற மாசிலாமணி, சென்னை 28 II, மாநாடு, கஸ்டடி, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, சிலம்பரசன் மற்றும் விஜய் ஆகியோரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி உள்ளார்.

அதன்படி இறுதியாக நடிகர் விஜய் வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்  விஜய் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு யாரை வைத்து படம் இயக்குவார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ளதாக அதகவல்கள் வெளியானது.

சிவகார்த்திகேயனுக்கு கதை ரொம்ப பிடிச்சு இருக்கு:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக மதராஸி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் அவர் அடுத்ததாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியவதாகவு கதையின் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் அதனை சிவகார்த்திகேயனிடம் கூறியபோது அவருக்கு மிகவும் பிடித்ததகாவும் தயாரிப்பாளரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Also Read… அந்த படத்தை நான் இயக்கவில்லை… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதீப் ரங்கநாதன்!

இணையத்தில் கவனம் பெறும் வெங்கட் பிரபுவின் பேச்சு:

Also Read… 100 – 200 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளலார் என்னைப் போலவே நினைத்தார் – சிலம்பரசன்