Vijay Sethupathi: எனது மகன் அந்த நடிகரின் தீவிர ரசிகன்.. பிக்பாஸ் மேடையில் ஓபனாக பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi On His Sons Favorite Hero: விஜய் சேதுபதியின் நடிப்பில் தொடர்ந்த படங்கள் தயாராகிவருகிறது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறார். நேற்று இந்த நிகழ்ச்சி ஆரம்பமான நிலையில், அதில் தனது மகனுக்கு பிடித்த நடிகர் குறித்து பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். கடந்த 2025 ஜூலை இறுதியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்றே கூறலாம். கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபத்திற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen) நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து புதிய திரைப்படங்ககளிலும் இவர் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்துவருகிறார்.
கடந்த 2024ம் ஆண்டு வெளியான சீசன் 8 நிகழ்ச்சி முதல் விஜய் சேதுபதி தொகுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது நேற்றும் 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய விஜய் சேதுபதி, தனது மகனுக்கு மிகவும் பிடித்த நடிகர் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க : ஹரிஷ் கல்யானின் டீசல்… இயக்குநர் வெற்றிமாறன் செய்த விஷயம்!
தனது மகன் குறித்து பேசிய விஜய் சேதுபதி :
அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய விஜய் சேதுபதி, எனது மகன் எப்போது என்னிடம் நான் ஒரு தீவிர சிலம்பரசனின் ரசிகன் என்று கூறிக்கொண்டே இருப்பான். நான் உடனே, வீட்டில் ஒரு பிரபல ஹீரோ இருக்கும்போது எனது மகனுக்கு இன்னொரு ஹூரோ பிடிக்கிறதே என்று நினைத்திருக்கிறேன்.
இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியில் இவர்கள் 20 பேர் தான் போட்டியாளர்கள்!
நான் இந்த விஷயத்தை விளையாட்டாகத்தான் கூறுகிறேன், ரசிகர்கள் யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியின் பேசியிருந்தார்.
விஜய் சேதுபதி பேசியது தொடர்பான வீடியோ பதிவு
#VijaySethupathi: My son will always say that he is an #SilambarasanTR fan🌟
“Veetla eh oru actor iruken Enaku oru Mariyathai vendam😂🔥”pic.twitter.com/qwIHZqxrQn— AmuthaBharathi (@CinemaWithAB) October 6, 2025
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் “பூரிசேதுபதி” என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துவருவதாக கூறபடுகிறது.
இதில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகர்கள் சம்யுக்தா மேனன் மற்றும் தபு போன்ற பிரபல நடிகைகளும் இணைந்து நடித்துவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டைடல் டீசர் சமீபத்தில் வெளியாகவிருந்த நிலையில், கரூர் விவகாரம் தொடர்பாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.