Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இது எனது நன்றிக்கடன்… பல நல்ல விஷயங்களை பண்றாங்க – தமிழக அரசுக்கு அஜித் குமார் பாராட்டு

Ajith Kumar : நடிகர் அஜித் குமார் தமிழ்நாடு விளையாட்டுத்துறையின் லோகோவை தனது ஜெர்சியில் இடம்பெற செய்திருந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஜித் குமார் தமிழக விளையாட்டுத்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது எனது நன்றிக்கடன்… பல நல்ல விஷயங்களை பண்றாங்க – தமிழக அரசுக்கு அஜித் குமார் பாராட்டு
உதயநிதி ஸ்டாலின் - அஜித் குமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Oct 2025 20:52 PM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) வெளிநாடுகளில்  நடைபெறும் கார் ரேஸ் போட்டிகளில் தனது அஜித் குமார் ரேசிங் சார்பாக தீவிரமாக கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தய போட்டிகளில் அவரது அணி வெற்றிபெற்று 3வது இடத்தை பிடித்தது. இந்த நிலையில் அஜித் குமார் தனது ஜெர்சியில் இந்திய சினிமாவின் லோகோ மற்றும் தமிழக விளையாட்டுத்துறையின் SDAT லோகோவையும் இடம்பெற செய்திருந்தார். இந்த நிலையில் அஜித் குமாரின் வெற்றியை பாராட்டும் விதமாக தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசை பாராட்டிய அஜித் குமார்

இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அஜித் குமார், தமிழக அரசை பாராட்டியிருந்தார். அவர் பேசியதாவது, இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் ரேசிங்கை தமிழ்நாடு அரசு சென்னையில் நடத்தியது மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கே மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகனாக அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன். அவர்கள் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை, யாரிடமும் நான் ஸ்பான்சர்ஷிப் கேட்பதும் இல்லை. இந்த விளையாட்டு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளுக்கும் பல நல்ல விஷயங்களை SDAT செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டுக்கே பெருமை… இதற்காக நடிகர் அஜித் குமாருக்கு நன்றி…. உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

 

 

இதையும் படிக்க : பெரியார் உலகம்… திமுக சார்பில் ரூ.1.50 கோடி கொடுக்கிறோம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அஜித் குமாருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் – ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.