Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெரியார் உலகம்… திமுக சார்பில் ரூ.1.50 கோடி கொடுக்கிறோம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

MK Stalin : திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், 31 எம்பிக்களின் ஊதியத்தையும் சேர்த்து திமுக சார்பில் ரூ.1.50 கோடி கொடுக்கிறோம் என அறிவித்தார்.

பெரியார் உலகம்… திமுக சார்பில் ரூ.1.50 கோடி கொடுக்கிறோம் –  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Oct 2025 21:03 PM IST

திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு அக்டோபர் 4, 2025 அன்று செங்கல்பட்டு (Chengalpattu) மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் . பேராசியருக்கு பிறகு என்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. திராவிடர் கழகத்திற்கு எதிராக தொடங்கியது அல்ல திமுக. திராவிடர் கழகத்தின் நீட்சி தான் திமுக. 92 வயதிலும் இளைஞர் போல வீரமணி பரப்புரை செய்கிறார். அவதூறுகளுக்கு பதில் தருகிறார். உங்கள் பணி சுமையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த விழாவில் சுயமரியாதைக்காரன் என்ற உணர்வுடன் பங்கேற்கிறேன் என்று பேசினார் இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திமுக சார்பில் ரூ.1.50 கோடி

பெரியாரின் சிந்தனைகளை அவர் வாழும் காலத்திலேயே நிறைவேற்றியது திமுக. திருச்சியில் உருவாகும் பெரியார் உலகத்துக்கு எனது ஒரு மாத ஊதியத்தை கொடுக்க முடிவெடுத்தேன். 31 எம்பிக்களின் ஊதியத்தையும் சேர்த்து திமுக சார்பில் ரூ.1.50 கோடி கொடுக்கிறோம். என்னைப் பற்றி வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதைப் பற்றி நான் கவலைப்படாமல் என் செயல்கள் மூலம் பதிலடி கொடுக்கிறேன். நம் இனத்தில் இருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்கு பிடிக்கவில்லை. தமிழும் பிடிக்காது. தமிழர்களும் பிடிக்காது. நம் தலைநிமிர்வதும் சிலருக்கு பிடிக்காது.

இதையும் படிக்க : ’ஒருவர் மீது பழி போட விரும்பல’ கரூர் துயரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு

சிலர் செருப்பு வீசினார்கள்

ஒரு காலத்தில் தந்தை பெரியார் பகுத்தறிவு பரப்புரை மேற்கொண்டு வீதிகளில் சென்றபோது, சிலர் செருப்பு வீசினார்கள். கல் வீசினார்கள், ஏன் கத்தி கூட வீசினார்கள். ஆனால், இன்று பெரியாரின் சிந்தனை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் போற்றப்படுகிறது.

இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்துவதுதான் திராவிட மாடல். தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும். அடுத்த தேர்தல் தமிழர்களை தற்காக்கும் தேர்தல். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்று உறுதியேற்போம் என்று பேசினார்.

இதையும் படிக்க : அரசியல் ஆதாயம் தேட கரூர் பயணம்.. முதல்வரை விமர்சித்த இபிஎஸ்!

பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம் என்ற அடிப்படையில் திருச்சி சிறுகனூரில் 100 கோடி செலவில் பெரியார் உலகம் உருவாகி வருகிறது. பெரியாரின் 150வது பிறந்த நாளில் இந்த பெரியார் உலகம் துவங்கி வைக்கப்படவுள்ளது. இதற்காக திராவிடர் கழகத்தினர் நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக சார்பில் ரூ.1.50 கோடி வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்.