Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

குஷியில் தென்மாவட்ட பயணிகள்.. நெல்லை வந்தே பாரத் ரயிலில் மேஜர் மாற்றம்.. வெளியான அறிவிப்பு

Chennai - Tirunelveli Vande Bharat Express : சென்னை  - நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும் என  மத்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம், கோவில்பட்டு மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குஷியில் தென்மாவட்ட பயணிகள்.. நெல்லை வந்தே பாரத் ரயிலில் மேஜர் மாற்றம்.. வெளியான அறிவிப்பு
வந்தே பாரத் ரயில்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 04 Oct 2025 06:38 AM IST

சென்னை, அக்டோபர் 04 : சென்னை  – நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும் என  மத்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.  கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில், தற்போது அதற்கு மத்திய ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.   நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிக வேகத்தில் இயக்கப்படும் ரயில் வந்தே பாரத்.  இந்த வந்தே பாரத் ரயிலில்  பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பயண நேரம் குறைவாக இருப்பதால் மக்கள்  வந்தே பாரத் ரயிலில் பயணித்து வருகின்றனர். ஆனால்,  இந்த ரயிலில் பொருளாதார ரீதியாக பார்த்தால், உயர் நடுத்தர வர்க்க மக்களே இதில் பயணிக்க முடியும்.

தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை – கோவை, சென்னை – நாகர்கோவில், சென்னை – நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போது அதிகமாக இருக்கும்.  சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.50 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.

Also Read : 2 நாட்களுக்கு கனமழை கொட்டும்.. சென்னைக்கு வந்த அலர்ட்.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

நெல்லை வந்தே பாரத் ரயிலில் மேஜர் மாற்றம்


நெல்லை சென்னை வந்தே பாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திணடுக்கல், மதுரை, விருதுநககர் ஆகிய ரயில் நின்று நெல்லை சென்றடைகிறது. நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அண்மையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை சந்தித்து பேசினார்.

Also Read : தமிழ்நாட்டில் இந்த இருமல் மருந்துக்கு தடை.. மக்களே உஷார்!

அதன்பிறகு துரை வைகோவும் அஸ்வின் வைஷ்ணவை சந்தித்து பேசினார். இந்த நிலையில், கோவில்பட்டு மக்களின் நீண்ட நாள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, நெல்லை – சென்னை வந்தே பாரத் இனி கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.