9 மணி நேரம் தான் டிராவல்.. சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்.. எப்போது தெரியுமா?
Chennai Rameswaram Vande bharat Rail : சென்னை ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. தற்போது நேர அட்டவணை, பாதை குறித்து தெற்கு ரயில்வே ஆலோசனை நடத்தி வருகிறது. விரையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, செப்டம்பர் 27 : சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது. தற்போது வந்தே பாரத் ரயிலின் நேரம், பாதை உள்ளிட்டவை குறித்து தெற்கு ரயில்வே ஆலோசனை நடத்தி வருகிறது. இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு ரயில்களையும் மத்திய அரசு இயக்கி வருகிறது. குறிப்பாக சொல்ல போனால் நாடு முழுவதும் வந்தை பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் அதிக வேகத்தில் இயக்கக் கூடியவை ஆகும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னையிலிருந்து நெல்லைக்கும், சென்னையிலிருந்து கோவைக்கும், பெங்களூருக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மேலும் ஒரு வண்டி பாரத் ரெயில் இயக்க தெற்கு ரயில்வே நாளைக்கு எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை ராமேஸ்வரத்திற்கு இடையே வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது . இதன் மூலம் சென்னையில் இருந்து 9 மணி நேரத்தில் ராமேஸ்வரத்திற்கு சென்று விடலாம். தற்போது விரைவு ரயில்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு குறைந்தது பத்து முதல் 12 மணி நேரம் ஆகுகிறது . வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் பட்சத்தில் சென்னை ராமேஸ்வரம் இடையே பயண நேரம் வெகுவாக குறைக்கூடும்.. 9 மணி நேரத்தில் 665 கிலோமீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் மேற்கொள்கிறது.
Also Read : காலாண்டு விடுமுறை.. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. போக்குவரத்து கழகம் நடவடிக்கை!




சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்
சென்னை ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, மானாமதுரை, மண்டபம் ஆதி ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயிலில் கட்டணம் என்பது 1400 ரூபாய் முதல் 2400 ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் சென்னையிலிருந்து அதிகாலையில் 5:50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு இராமேஸ்வரத்தில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை வந்தடையும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் சென்னை ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் இயக்குவதற்கான நேரம் மற்றும் வழிப் பாதை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read : டாஸ்மாக்கில் பாட்டில் திரும்ப பெறும் திட்டம்.. சிக்கலில் தமிழக அரசு!
ஏனென்றால் வந்தே பாரத் ரயில்கள் முழுமையாக மின்மயமாக்கப்பட்ட பாதையில் மட்டுமே இயக்க முடியும். அண்மையில் தான் ராமநாதபுரம் ராமேஸ்வரம் இடையில் மின் மயமாக்கும் பணிகள் நிறைவடைந்தன. அதே நேரம் உச்சிப்புளி ரயில் நிலையம் அருகே மின் மயக்கம் செய்யப்படவில்லை. இதனால் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவது சிக்கலாக இருக்கிறது. உண்மையிலேயே மின்மயமாக்க பணிகள் முழுமை அடைந்த பிறகு, வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.