காலாண்டு விடுமுறை.. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. போக்குவரத்து கழகம் நடவடிக்கை!
Omni Bus Fare Hike : காலாண்டு மற்றும் ஆயுத பூஜை என தொடர் விடுமுறையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, செப்டம்பர் 27 : தமிழகத்தில் தொடர் விடுமுறையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் வேலை நிமித்தமாக பலரும் வசித்து வருகின்றனர். கோவை போன்ற நகரங்களில் மக்கள் வேலை நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள்.
இதற்கு பலரும் பேருந்து, ரயில்களில் டிக்கெட் புக் செய்து செல்வார்கள். இந்த நேரத்தில், ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்வார்கள். இந்த நேரத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இரண்டு மடங்கு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில், தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also Read : டாஸ்மாக்கில் பாட்டில் திரும்ப பெறும் திட்டம்.. சிக்கலில் தமிழக அரசு!




ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், 2025 அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால், அதனை தடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டர் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோர் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அதிகப்பட்டியான கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகளை தீவிரமகா சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : டிடிவி தினரகன் – ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு.. 20 நிமிடம் நடந்த மிட்டீங்.. என்ன மேட்டர்?
சிறப்பு பேருந்துகள்
காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜய தசமி என தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 3,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 2025 செப்டம்பர் 26ஆம் தேதியான நேற்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.