Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை.. விசாரணையில் ட்விஸ்ட்!

Namakkal Crime News: கொல்லிமலை அருகே 55 வயதுமிக்க முதியவர் கொலை வழக்கில் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்ததாக நினைக்கப்பட்ட நிலையில் உறவினரே இப்படியான செயலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தலையில் கல்லை போட்டு முதியவர் கொலை.. விசாரணையில் ட்விஸ்ட்!
முதியவர் கொலை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 26 Sep 2025 08:26 AM IST

நாமக்கல், செப்டம்பர் 26: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே நடைபெற்ற கொலை சம்பவத்தில் 55 வயதுமிக்க முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சேலூர்நாடு பள்ளக்குழிப்பட்டி அடுத்ததாக குளிக்காடு என்ற ஊர் உள்ளது. இங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக வாழவந்திநாடு காவல்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் இறந்து கிடந்த முதியவர் அதே பகுதியான பள்ளக்குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காசாம்பு என்ற செல்வராஜ் என தெரிய வந்தது. அவரது தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இறந்த செல்வராஜுக்கும், அவரது தம்பி துரைசாமிக்கும் இடையே நில பிரச்சினை இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. எனவே அண்ணனை தம்பியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.

மேலும் தம்பியை தேடி வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர் இல்லை என்ற நிலையில் சந்தேகம் மேலும் வலுத்தது.  இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read: பெண்ணுடன் தனிமையில் இருந்த நபர்.. பணம் தர மறுத்ததால் கொலை!

தகாத உறவால் நிகழ்ந்த கொலை

அதாவது செல்வராஜின் மகன் விஜயகுமார் விவசாயம் செய்து வரும் நிலையில் அவரது வீட்டிற்கு அடிக்கடி பெரியப்பா மகன் காசி துரைசாமி வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் விஜயகுமாரின் மனைவி சந்திராவுக்கும் காசி துரைசாமிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் திருமணத்தை மீறிய தகாத உறவாக மாறியுள்ளது.

இதனையறிந்த விஜயகுமார் தனது தந்தையிடம் முறையிட்டுள்ளார். உடனடியாக மகனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்த செல்வராஜ் காசி துரைசாமியை அழைத்து கண்டித்துள்ளார்.  தனது மருமகளுடன் தகாத உறவை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதனை கண்டு கொள்ளாத காசி துரைசாமி அதனைத் தொடர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வராஜ் குழிக்காடு ட்ரான்ஸ்பார்மர் அருகே மது அருந்தி கொண்டினார்.  அப்போது அந்த பக்கமாக போதியில் வந்து காசி துரைசாமியை அழைத்து மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் உண்டாகி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த கட்டையால் சரமாரியாக தாக்கியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Also Read:2 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய்.. மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் வெறிச்செயல்!

இதன்பின்னர் காசி துரைசாமியை போலீசார் கைது செய்தனர். மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த காசி துரைசாமி அண்ணன் என்று முறையில் அடிக்கடி செல்வராஜ் வீட்டில் இருந்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது சந்திராவுடன் ஏற்பட்ட பழக்கம் தற்போது கொலைகள் முடிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.