கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த கணவர்.. மனமுடைந்த மனைவி தற்கொலை!
Wife Killed Herself | திருப்பத்தூரில் 13 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பதி காதல் திருமணம் செய்துக்கொண்ட நிலையில், கணவன் தான் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

ஜோலார்பேட்டை, செப்டம்பர் 24 : திருப்பத்தூரில் கணவர் தான் திருமணத்தை மீறிய தொடர்பில் இருக்கும் வேறு ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து ஒன்றாக வாழ வேண்டும் என்று கூறியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த அந்த பெண்ணின் கணவர், இனி அந்த பெண் நம்முடன் இதே வீட்டில் தான் வசிப்பார் என கூறியதால் மனமுடைந்த அந்த பெண் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த கணவர் – மனைவி விபரீத முடிவு
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டி. இவர் அதே பகுதியில் வசிக்கும் அம்மு என்று பெண்ணை 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அருள்பாண்டிக்கும், அம்முவின் நெருங்கிய சொந்தக்கார பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : பழுது காரணமாக மேல் தளத்தில் மோதிய லிஃப்ட் – பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் பலி – சென்னையின் பிரபல திரையரங்கில் அதிர்ச்சி சம்பவம்




விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி
இந்த நிலையில் சம்பவத்தன்று தனது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்த அருள்பாண்டி அவர் இனிமேல் இந்த வீட்டில் தான் இருப்பார் என் அம்முவிடம் கூறியுள்ளார். ஆனால், அம்மு அதற்கு மறுப்பு தெரிவுத்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த அம்மு, வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விஷம் குடித்துவிட்டு அங்கேயே மயங்கி கிடந்துள்ளார்.
இதையும் படிங்க : பணம் கொடுக்கல் -வாங்கல் தகராறு.. பாரில் ஒருவர் கொலை!
மாடிக்கு சென்ற அம்மு நீண்ட நேரமாகியும் கீழே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மேலே சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் மருத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)