கூகுள் ஏஐ உலகளாவிய ஆராய்ச்சிப் போட்டியில் கோவை மாணவர் சாதனை.. அமைச்சர் சம்பத் குமார் நேரில் அழைத்து பாராட்டு..
270 சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேள்விகள் மூலம், ஏஐ மாடல்கள் கேள்வியின் கடினத்தன்மையைக் கணித்து, தங்களது பதிலின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி, பதிலளிக்க வேண்டுமா அல்லது மனித மேற்பார்வைக்கு ஒப்படைக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் வகையில் இந்த மதிப்பீடு அமைக்கப்பட்டது. இதில் கூகுள் ஜெமினி, ஏந்த்ரோபிக் கிளாட், அலிபாபா கியூவென், டீப் சீக் உள்ளிட்ட 8 முன்னணி ஏஐ மாடல்கள் மதிப்பிடப்பட்டன.
ஜூலை 22, 2026: கூகுள் டீப் மைண்ட் மற்றும் காகில் இணைந்து நடத்திய உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி ஹேக்கத்தானில், கோவையைச் சேர்ந்த ஏஐ ஆராய்ச்சியாளரும், சென்னை ஐஐடி மாணவருமான அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசுடன் கிராண்ட் பிரைஸ் வென்று சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையைப் பாராட்டிய தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார், அவரை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரைச் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார்.
கேஜ் – செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மதிப்பீட்டுக் கருவி:
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் இயங்கி வரும் ஈராஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் ஏஐ ஆராய்ச்சியாளரான அர்ஜுன் திலக், அந்நிறுவனத்தின் மற்றொரு ஏஐ ஆராய்ச்சியாளர் ராம்குமார் ஆகியோர் இணைந்து ‘கேஜ்’ என்ற செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மதிப்பீட்டுக் கருவியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி, ஏஐ மாடல்களுக்கு தங்களுக்குத் தெரியாததை உணர்ந்து, தேவைப்படும் நேரத்தில் மனித உதவியை நாடும் திறன் உள்ளதா என்பதை மதிப்பிடுகிறது.
மேலும் படிக்க: “கோடியில் அபராதம்!”.. 6 ஆண்டுகளாக போலி கருப்பட்டி தயாரித்து ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு.. உடன்குடியில் அதிர்ச்சி!!
ரூ.24 லட்சம் பரிசுத்தொகை:
‘ஏஜிஐ-ஐ நோக்கிய முன்னேற்றத்தை அளவிடுதல்: அறிவாற்றல் திறன்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 192 நாடுகளைச் சேர்ந்த 7,654 போட்டியாளர்கள் மற்றும் 1,063 அணிகள் பங்கேற்றன. மொத்தம் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகைக்காக நடைபெற்ற போட்டியில், உலகம் முழுவதும் வழங்கப்பட்ட நான்கு கிராண்ட் பிரைஸ் விருதுகளில் ஒன்றை அர்ஜுன் திலக் மற்றும் அவரது குழுவினர் வென்றனர். இதற்காக 25,000 அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் ரூ.24 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: ராகுல் காந்தி கைது – ஜனநாயகத்திற்கு எதிரானது.. முதல்வர் விஜய் கண்டனம்..
270 சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேள்விகள் மூலம், ஏஐ மாடல்கள் கேள்வியின் கடினத்தன்மையைக் கணித்து, தங்களது பதிலின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி, பதிலளிக்க வேண்டுமா அல்லது மனித மேற்பார்வைக்கு ஒப்படைக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் வகையில் இந்த மதிப்பீடு அமைக்கப்பட்டது. இதில் கூகுள் ஜெமினி, ஏந்த்ரோபிக் கிளாட், அலிபாபா கியூவென், டீப் சீக் உள்ளிட்ட 8 முன்னணி ஏஐ மாடல்கள் மதிப்பிடப்பட்டன.
இந்த ஆய்வு, அதிக மதிப்பெண் பெறும் ஏஐ மாடல் எப்போதும் அதிக சுய விழிப்புணர்வுடன் செயல்படாது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அரசு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், “எனக்கு உறுதியாகத் தெரியவில்லை; மனிதர் சரிபார்க்க வேண்டும்” என்று கூறும் திறன் ஏஐ பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.