2 மாத பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய்.. மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் வெறிச்செயல்!
Mother Killed Two Months Old Infant | கர்நாடகாவில் தாயே தனது இரண்டு மாத பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்துவிட்டு குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக நாடகமாடிய நிலையில், சிசிடிவி காட்சிகளின் மூலம் உண்மையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சண்டூர், செப்டம்பர் 23 : கர்நாடகாவில் (Karnataka) பிறந்து இரண்டே மாதங்களான பெண் குழந்தையை அவரது தாயே கால்வாயில் வீசி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் அவர் ஆத்திரத்தில் இந்த கொடூரச் செயலை செய்துள்ளார். தாயே தனது பச்சிளம் குழந்தையை கொலை செய்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரண்டு மாத பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்
கர்நாடகா மாநிலம் பல்லார் மாவட்டம் சண்டூர் பகுதியை சேர்ந்தவர் சனோஜ்குமார். இவரது மனைவி பிரியங்கா. இவர்களின் சொந்த ஊர் பீகார், ஆனால் இவர்கள் இருவரும் சண்டூரில் உள்ள தொழிற்சாலயில் பணியாற்றி வருவதால் கர்நாடகாவில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையும் படிங்க : 1 மணி நேரம் 34 நிமிடம்… விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து பயணித்த 13 வயது ஆப்கான் சிறுவன் – உயிர் பிழைத்தது எப்படி?




மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் தாய் வெறிச்செயல்
ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் அது பிரியங்காவுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 20, 2025 அன்று காலையில் தனது இரண்டு மாத பெண் குழந்தையை காணவில்லை என்றும், யாரோ கடத்திச் சென்றுவிட்டதாகவும் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் அடிப்படையில் போலீசார் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், குழந்தை கடத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க : UP Dowry Harassment: வரதட்சணை கொடுமையின் உச்சம்..! மருமகள் இருட்டு அறையில் லாக்! பாம்பை விட்டு மாமியார் செய்த கொடூரம்..!
காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்
குழந்தை காணாமல் போனது தொடர்பான எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பிரியங்கா அதிகாலையில் குழந்தையை தூக்கிச் சென்றதும் வீட்டிற்கு வரும்போது குழந்தை இல்லாமல் வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், போலீசார் பிரியங்காவின் பக்கம் விசாரணையை திருப்பிய போது குழந்தையை யாரும் கடத்தவில்லை தான் தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரியங்கா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்ததால் பெற்ற தாயே பச்சிளம் குழந்தையை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.