காட்டுக்குள் கேட்ட அழுகுரல்.. உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்!
15 Days Old Infant Buried Alive | உத்தர பிரதேசத்தில் உள்ள வனப்பகுதி ஒன்றில் பிறந்து வெறும் 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில், அந்த வழியாக சென்ற நபர அளித்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், செப்டம்பர் 15 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) உள்ள வனப்பகுதி ஒன்றில் பிறந்து வெறும் 15 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதி வழியாக நடந்துச் சென்ற நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் அந்த குழந்தையை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பச்சிளம் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை
உத்தர பிரதேச மாவட்டம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் வனப்பகுதி ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 14, 2025) மரங்கள் அடர்ந்த அந்த வனப்பகுதி வழியாக ஒருவர் நடந்துச் சென்றுள்ளார். அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகே சென்று பார்த்துள்ளார். அங்கு மண்ணில் புதைந்த நிலையில் பச்சிளம் குழந்தையின் கைகள் தெரிந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த நபர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : திடீரென ஏற்பட்ட பிரசவ வலி.. காட்டில் குழந்தை பெற்ற பெண்.. தாயும், சேயும் நலம்!




பிறந்து 15 நாட்களே ஆன குழந்தை மீட்பு
இந்த நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ஆய்வு செய்துள்ளனர். அப்போது உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட அந்த குழந்தையை மீட்டுள்ளனர். அந்த குழந்தை பிறந்து 15 நாட்களே ஆவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார் அதனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அந்த பச்சிளம் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : கள்ளக்காதலர்களுக்கு நகையை திருடி கொடுத்த மனைவி.. கணவன் மீது பழி கூறி புகார்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்கள்!
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த குழந்தை யாருடையது, பிறந்து 15 நாட்களே ஆகும் நிலையில் அது உயிருடன் புதைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து வெறும் 15 நாட்களே ஆகும் பெண் பச்சிளம் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.